‘மதரீதியாக விமர்சிப்பதை ஏற்க முடியாது’: விராட் கோலி பதிலடி

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது மதரீதியிலாக விமர்சனம் வைத்ததை ஏற்க முடியாது என அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
‘மதரீதியாக விமர்சிப்பதை ஏற்க முடியாது’: விராட் கோலி பதிலடி
‘மதரீதியாக விமர்சிப்பதை ஏற்க முடியாது’: விராட் கோலி பதிலடி
Published on
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது மதரீதியிலாக விமர்சனம் வைத்ததை ஏற்க முடியாது என அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கடந்த 24ஆம் தேதி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பந்துவீசிய இந்திய வீரர் முகமது ஷமியை அவரது மதத்தைக் குறிப்பிட்டு சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துகள் பதியப்பட்டன. 

இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் முகமது ஷமிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் நாளை இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதிக்க்கொள்ள உள்ள நிலையில் முகமது ஷமிக்கு எதிரான கருத்துக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய விராட் கோலி, முகமது ஷமி மீது மதரீதியிலாக விமர்சனம் வைப்பவர்கள் முதுகெலும்பற்றவர்கள் எனத் தெரிவித்தார். மேலும் இந்திய அணிக்காக முகமது ஷமியின் பங்களிப்பை அறியாதவர்களே இத்தகைய விமர்சனத்தை முன்வைப்பதாகவும், இத்தகைய விமர்சனங்கள் ஏற்கத்தக்கவை அல்ல எனவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com