கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள்: 'கில்லர்' மில்லர் மிரட்டலில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள்: 'கில்லர்' மில்லர் மிரட்டலில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது. 


இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது. 

டி20 உலகக் கோப்பையின் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் பேட்டிங் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசன்கா 58 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார். மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறியது இலங்கை பேட்டிங்கில் பின்னடைவை ஏற்படுத்தியது.

தென் ஆப்பிரிக்க தரப்பில் தப்ரைஸ் ஷம்ஸி மற்றும் டுவைன் பிரிடோரியஸ் தலா 3 விக்கெட்டுகளையும், அன்ரிச் நோர்க்கியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த 49 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

இதன்பிறகு, கேப்டன் தெம்பா பவுமா மற்றும் எய்டன் மார்கிரம் பாட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால், வனிந்து ஹசரங்கா மார்கிரம் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார். அதற்கு அடுத்த ஓவரில் பவுமா மற்றும் பிரிடோரியஸ் விக்கெட்டை வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவுக்கு பெரும் பின்னடைவை உண்டாக்கினார்.

இதனால், கடைசி 2 ஓவர்களில் 25 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை தென் ஆப்பிரிக்காவுக்கு ஏற்பட்டது.

ஆனால், துஷ்மந்தா சமீரா வீசிய 19-வது ஓவரில் 1 சிக்ஸரைப் பறக்கவிட்டு நெருக்கடியை சற்று தணித்தார்.

கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால், டேவிட் மில்லர் 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு இலங்கை ரசிகர்கள் மனதை நொறுக்கினார்.

5-வது பந்தில் ககிசோ ரபாடா 1 பவுண்டரி அடிக்க தென் ஆப்பிரிக்கா வெற்றி இலக்கை அடைந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மில்லர் 13 பந்துகளில் 23 ரன்களும், 7 பந்துகளில் 13 ரன்களும் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு இது 2-வது வெற்றி. புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com