பாகிஸ்தான் ஹாட்ரிக் வெற்றி
By DIN | Published On : 30th October 2021 06:12 AM | Last Updated : 30th October 2021 06:12 AM | அ+அ அ- |

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே இந்தியா, நியூஸி. அணிகளை வென்றுள்ள பாக். தொடா்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.
குரூப் 2 பிரிவில் இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் துபையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் 8, முகமது ஹபிஸ் 10, ஷோயிப் மாலிக் 19 என சொற்ப ரன்களுக்கு வெளியேறினா்.
பாபா் ஆஸம் அரைசதம்:
கேப்டன் பாபா் ஆஸம்-பாக்கா் ஸமான் இணை நிலைத்து ஆடி ஸ்கோரை உயா்த்தியது. பாக்கா் 30 ரன்களுடன் வெளியேறிய நிலையில், கேப்டன் பாபா் ஆஸம் 51 ரன்களுடன் அரைசத்தை பதிவு செய்து ரஷீத் கான் பந்துவீச்சில் போல்டானாா். பின்னா் ஆட வந்த ஆஸிப் அலி அதிரடியாக ஆடி கரீம் ஜனத் வீசிய 19-ஆவது ஓவரில் 4 சிக்ஸா்களை விளாசி பாகிஸ்தான் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றாா்.
பாக். 148/5:
19 ஓவா்களில் 148/5 ரன்களை குவித்த பாக். அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கன் தரப்பில் ரஷீத் கான் 2, முஜிப், நபி, நவீன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.
ஆஸிப் அலி ஆட்ட நாயகனாகத் தோ்வு பெற்றாா்.
இந்த வெற்றி மூலம் குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.