ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

கோலியின் ஆட்டம் குறித்து அனுஷ்கா என்ன சொல்கிறார்?

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் ஆட்டம் குறித்து, அவரது மனைவி அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :23 அக்டோபர் 2022, 2:18 pm

DIN


டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் ஆட்டம் குறித்து, அவரது மனைவி அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அசாத்தியமான ஒரு ஆட்டத்தை ஆடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்த விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார்.

கோலியின் இந்த ஆட்டத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த வரிசையில் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்பு கலந்த பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா பதிவு:

"இன்றைய இரவில் ஏராளமான மக்களின் வாழ்வில் நீ மகிழ்ச்சியைத் தந்துள்ளாய். அதுவும் தீபாவளிக்கு முந்தைய நாளில்!

என் வாழ்வில் நான் பார்த்த தலைசிறந்த ஆட்டம் என்றுதான் நான் சொல்ல வேண்டும். நம் அம்மா ஏன் இப்படி கத்தி, குதித்து ஆர்ப்பரிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத சிறுகுழந்தைதான் நம் மகள். ஆனால், நம் தந்தை மிகக் கடினமான காலத்துக்குப் பிறகு, வலிமையுடன், முன்பு எப்போதும் இல்லாததைவிட சிறந்தவராக மீண்டு வந்து, அன்றைய இரவு ஒரு தலைசிறந்த இன்னிங்ஸை விளையாடினார் என்பதை அவள் ஒருநாள் புரிந்துகொள்வாள்.

உன்னை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது."

இதற்குப் பதிலளித்துள்ள விராட் கோலி, "என்னுடைய ஒவ்வொரு தருணத்திலும் உடன் இருந்தமைக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.