
எதிரணியின் வலிமையைப் பற்றி யோசிக்காது தங்களது திறமையில் கவனம் செலுத்துவதாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி குரூப் சி பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில், எதிரணியின் வலிமையைப் பற்றி யோசிக்காது தங்களது திறமையில் கவனம் செலுத்துவதாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எதிரணியின் வலிமையைப் பற்றி யோசிப்பதைக் காட்டிலும், எங்களது அணியின் திறமைகளில் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும். இந்த ஒரு விஷயத்தையே அணியில் உள்ள அனைவருக்கும் நான் கூறி வருகிறேன். எந்த அணிக்கு எதிராக விளையாடுகிறோம் என்பது முக்கியமில்லை. எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறோம் என்பதே முக்கியம்.
நேர்மையாக கூறவேண்டுமென்றால், போட்டியின் முடிவு குறித்து நான் அதிகம் கவலைப்படுவதில்லை. நாங்கள் எந்த அளவுக்கு வெற்றிக்காக உழைப்பைக் கொடுத்துள்ளோம் என்பதிலேயே கவனம் செலுத்துகிறோம். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பையில் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், டி20 உலகக் கோப்பையில் இதுபோன்ற வெற்றியைப் பெற்றதில்லை. எங்களது சிறப்பான வெற்றிகளில் இதுவும் ஒன்று என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.