
டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு அமெரிக்க அணி தகுதி பெற்றது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஃபுளோரிடாவில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த இன்றையப் போட்டி மழையினால் கைவிடப்பட்டது.
இதனையடுத்து, புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் அமெரிக்க அணி இரண்டாவது இடத்தில் இருப்பதுடன் சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்றது.
மழையின் காரணமாக இன்றையப் போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டதால், பாகிஸ்தான் அணியின் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும் கனவு தகர்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.