
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஹார்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பந்த் இருவரும் இந்திய அணிக்கு மிகுந்த வலிமை சேர்ப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அவர்களைப் பாராட்டிள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான வெற்றிகள் இந்திய அணியை சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய வழிவகுத்தது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஹார்திக் பாண்டியா எதிர்பார்த்ததை விட மிகவும் சிறப்பாக செயல்படுவதாகவும், மூன்றாவது இடத்தில் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடுவதாகவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஹார்திக் பாண்டியா விக்கெட்டுகள் எடுப்பது இந்திய அணிக்கு மிகவும் சிறப்பானது. இந்திய அணியில் அவர் நான்காவது வேகப் பந்துவீச்சாளராக இடம்பெற்றுள்ளார். ஆனால், அவர் எடுத்துள்ள விக்கெட்டுகளைப் பார்க்கும்போது, எதிர்பார்த்ததை விட அவர் மிகவும் சிறப்பாக செயல்படுவது தெரியும். ரிஷப் பந்த 3-வது வீரராக களமிறங்கி அருமையாக விளையாடி வருகிறார்.
அவர் மூன்றாவது இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடுவது இந்திய அணிக்கு வலிமை சேர்த்துள்ளது. 3-வது இடத்தில் அவர் களமிறங்குவதால், இடதுகை - வலதுகை காம்பினேஷனும் தொடர்கிறது. இந்திய அணி சிறப்பாக விளையாடியுள்ளது. அதன் காரணமாக அவர்கள் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.