எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

இடநெருக்கடி சிக்கலில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம்

கள்ளக்குறிச்சி, ஆக. 9:   இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது கள்ளக்குறிச்சி பஸ் நிலையம். அதை விரிவுபடுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கள்ளக்குறிச்சி மக்களின் எதிர்பார்ப்பு சென்னை - கோயம்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:11 am

எஸ். முரளி

கள்ளக்குறிச்சி, ஆக. 9:   இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது கள்ளக்குறிச்சி பஸ் நிலையம். அதை விரிவுபடுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கள்ளக்குறிச்சி மக்களின் எதிர்பார்ப்பு

சென்னை - கோயம்புத்தூர் இடையே மையப் பகுதியில் கள்ளக்குறிச்சி அமைந்துள்ளது.

சென்னை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், கேரளத்துக்குச் சென்று திரும்பும் பஸ்கள் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தின் உள்ளே வந்துதான் செல்கின்றன. ஒருநாளில் 1500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.

பஸ்கள் வந்துசெல்ல போதுமான இடவசதி கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இல்லை.

பஸ்களின் இட நெருக்கடியால் குறுக்கும், நெடுக்குமாக பஸ்கள் நிறுத்தப்படுவது பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. இதைப் போக்குவரத்து போலீஸôர் கண்டு கொள்வதில்லை. 57 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது விரைவு பஸ், நகர பஸ், மினி பஸ் என நாள் ஒன்றுக்கு 1500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் நிலையத்துக்குள் கூடை வியாபாரிகள், தட்டு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் குறுக்கிடுவதால் இட நெருக்கடி ஏற்படுகிறது. பஸ் நிலையத்துக்கென நகராட்சி மூலம் தாற்காலிகமாக ஒரு காவலரை நியமித்தும் அவர் எதையும் கண்டு கொள்வதில்லை.

நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் 70 கடைகளை கட்டி உள்ளனர். அதன் முன் பகுதியில் அவர்களே நடைபாதையை அதிக அளவு ஆக்கிரமித்துள்ளனர். அதனால் மக்கள் நடந்து செல்லவே மிகவும் கஷ்டப்படுகின்றனர். முதியவர்கள் உட்காருவதற்கு சிறுசிறு கட்டைகளை கட்டி உள்ளனர். அதில் பயணிகள் உட்கார முடிவதில்லை. அதில் பூ வியாபாரம் செய்பவர்கள் ஆக்கிரமித்து கடைகளை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்கள், 7 நீதிமன்றங்கள், பள்ளி, கல்லூரிகள், பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி நிலையங்கள், அரசு மருத்துவமனை ஆகியவை உள்ளன.

ஆந்திரம், கேரளம், கர்நாடகம் செல்லும் பஸ்களும் கள்ளக்குறிச்சி வழியாகச் செல்கின்றன.

மக்கள் நெருக்கடியைத் தவிர்க்க நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்தை விரிவுபடுத்த கிழக்குப் பகுதியில் உள்ள கடைகளை இடித்துவிட்டு பின் பக்கம் உள்ள நகராட்சி இடத்தில் விரிவுபடுத்த வேண்டும். நகராட்சி அலுவலக கட்டடத்தை இடித்துவிட்டு நகராட்சி திருமண மண்டப வளாகத்தில் கட்ட ரூ.50 லட்சம் ஒதுக்கினர். ஆனால் இப் பணிகள் இதுவரை தொடங்கவில்லை. நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்தை விரிவுபடுத்தும் பணியைத் தொடங்குமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.