வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஐ.ஏ.எஸ். அதிகாரி மகனுக்கு பன்றிக் காய்ச்சல்

சென்னை, ஆக. 25: சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகனுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவருக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையின் தனிப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:46 am

ஜே.ரங்கராஜன்

சென்னை, ஆக. 25: சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகனுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 அவருக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையின் தனிப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 இதைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ள அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி, மகள் ஆகியோரும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

 தேறி வரும் 10 மாணவர்கள்: சென்னை அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 6 எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் அண்மையில் உறுதி செய்யப்பட்டு, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இது தவிர பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் நான்கு மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரது உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

 மொத்தம் 16 பேர்: சென்னை அரசு பொது மருத்துவமனையின் தனிப் பிரிவில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் 16 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.