சென்னை, ஜூலை 1: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,483 இடங்கள், முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்கில் 1398 இடங்களாகக் குறைகிறது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதல் கட்ட கவுன்சலிங்கின்போது மாணவர்களைச் சேர்க்க முடியாது என்பதால் 85 எம்.பி.பி.எஸ். இடங்கள் குறைகின்றன.
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் வரும் 6-ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் மொத்த இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஏன் அனுமதி இல்லை? கட்டட குறைபாட்டைச் சுட்டிக்காட்டி தருமபுரியில் மாணவர் சேர்க்கை கூடாது என ஏற்கெனவே இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டது.
இதையடுத்து சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் எடுத்த முயற்சியின் காரணமாக இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் தில்லியிலிருந்து தருமபுரிக்கு விரைவில் வந்து மீண்டும் ஆய்வு செய்ய உள்ளனர். ஆகஸ்ட் மாதம் இரண்டாம் கட்ட எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் தொடங்குவதற்குள் தருமபுரிக்கு அனுமதி கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
அதாவது தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 இடங்களுக்கு (அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போய்விடும்.) மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.
கட் - ஆஃப் 197.75: தருமபுரி இல்லாமல் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு முதல் கட்ட கவுன்சலிங்கில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இல்லாததால் 85 இடங்கள் குறைந்து, 1,398 இடங்களுக்கு பொதுப் பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவு என இட ஒதுக்கீட்டு விகிதங்களைப் பின்பற்றும் நிலையிலும் பொதுப் பிரிவு கட் - ஆஃப் மதிப்பெண் 197.75-ல் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
மாறாக, மொத்த இடங்கள் குறைந்ததால் பொதுப் பிரிவு (31 சதவீத) இடங்களும் 460-லிருந்து 433-ஆகக் குறைந்துள்ளது. இதேபோன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 393-லிருந்து 370-ஆகவும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கான இடங்கள் 52-லிருந்து 49-ஆகவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 297-லிருந்து 280-ஆகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 225-லிருந்து 213-ஆகவும் தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினருக்கான இடங்கள் 41-லிருந்து 39-ஆகவும் பழங்குடி வகுப்பினருக்கான இடங்கள் 15-லிருந்து 14-ஆகவும் குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

