வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

எம்.பி.பி.எஸ். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கட் - ஆஃப் 196.75

சென்னை, ஜூலை 2: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட் - ஆஃப் 196.75-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு எம்.பி

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 12:45 pm

ஜே.ரங்கராஜன்

சென்னை, ஜூலை 2: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட் - ஆஃப் 196.75-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முற்படுத்தப்பட்ட மாணவர்கள், பிற்படுத்தபட்ட மாணவர்கள், உள்பட பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட் - ஆஃப் மதிப்பெண் 197.75-ஆக உள்ளது.

இந்த நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட் - ஆஃப் ஒரு மதிப்பெண் மட்டும் குறைந்து 196.75 என இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி கிடையாது என்பதால்...: சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் வரும் 6-ம் தேதி முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் தொடங்குகிறது.

முதல் கட்ட கவுன்சலிங்கின்போது தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க முடியாது.

இதையடுத்து சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த அரசு எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 1,483-லிருந்து 1,398-ஆகக் குறைந்துள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கு 370 இடங்கள்: அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1,398 என்ற இடங்களின் அடிப்படையில், அனைத்து வகுப்பினரையும் உள்ளடக்கிய பொதுப் பிரிவினருக்கு 433 இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 370 இடங்களும் கிடைக்கும்.

எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் அனைத்து வகுப்பினரையும் உள்ளடக்கிய பொதுப் பிரிவினருக்கான முதல் 433 இடங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 284 மாணவர்கள் (65.5 சதவீதம்) இடம்பெற்றுள்ளனர்.

பொதுப் பிரிவில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாத பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், அவர்களது ஒதுக்கீட்டுக்கு உரிய 370 இடங்களில்தான் சேர முடியும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மொத்தம் 5,606 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். ரேங்க் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எனத் தனியாக "கம்யூனிட்டி ரேங்க் எண்' அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கட் - ஆஃப் மதிப்பெண் 196.75-ஆக இருக்கும்.

சென்னை கல்லூரிகளில் இடம் கிடைக்குமா? சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மாணவர்கள் சேர விரும்புவது இயல்பானது.

இந்த மூன்று கல்லூரிகளிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மொத்த இடங்கள் 94. மேலே குறிப்பிட்ட மூன்று மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் சேர குறைந்தபட்சம் 197.25 கட் - ஆஃப் எடுத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

மொத்தம் உள்ள 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 280 இடங்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 213 இடங்களும், தாழ்த்தப்பட்ட அருந்ததி வகுப்பினருக்கு 39 இடங்களும், பழங்குடி வகுப்பினருக்கு 14 இடங்களும் ஒதுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.