வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

எம்.பி.பி.எஸ். : அரசு ஒதுக்கீட்டுக்கு மேலும் 162 இடங்கள்- "தருமபுரி' இழுபறி நீடிப்பு

சென்னை, ஜூலை 28: தமிழகத்தில் இரண்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.  இதையடுத்து இந்த இரண்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மூலம் மருத்துவக் கல்வி தேர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:05 pm

ஜே.ரங்கராஜன்

சென்னை, ஜூலை 28: தமிழகத்தில் இரண்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

 இதையடுத்து இந்த இரண்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மூலம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவின் அரசு ஒதுக்கீட்டுக்கு (65 சதவீதம்) மொத்தம் 162 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.

 இந்த இடங்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறும் இரண்டாவது கட்ட கவுன்சலிங்கின்போது நிரப்பப்படும் என்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அனுமதியில் இழுபறி நிலை நீடிக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 மதுராந்தகம், திருச்சி: மதுராந்தகத்தில் "கற்பகவிநாயகா மருத்துவக் கல்லூரி' என்ற பெயரில் புதிய மருத்துவக் கல்லூரியை முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி தொடங்கியுள்ளார்.

 நடப்புக் கல்வி ஆண்டில் (2009-10) மொத்தம் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்தக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்தக் கல்லூரியிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 65 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.

 திருச்சி அருகே...: சென்னை காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம். மருத்துவ பல்கலைக்கழகத்தை நடத்தி வரும் வேந்தர் பச்சமுத்து, திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் (திருச்சி - சென்னை சாலையில்.) "சென்னை மெடிக்கல் காலேஜ்' என்ற பெயரில் புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்கியுள்ளார்.

 நடப்புக் கல்வி ஆண்டில் (2009-10) மொத்தம் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்தக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

 இந்தக் கல்லூரியிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும் என்றார் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன்.

 "தருமபுரி' நிலை என்ன? தருமபுரியில் கடந்த ஆண்டு 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

 தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்புக் கல்வி ஆண்டில் (2009-10) மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்காததால், முதல் கட்ட கவுன்சலிங்கின்போது மாணவர்கள் சேர்க்கப்படவில்லை.

 இந்த மாதம் 3-ம் தேதி இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் குழு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியை மீண்டும் ஆய்வு செய்தது. எனினும் மாணவர்களைச் சேர்க்க அனுமதி வழங்க முடியாது என இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் குழு அண்மையில் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பிவிட்டது.

 சட்ட ரீதியான நடவடிக்கை: ""தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு (ஆண்டுக் கட்டணம் ரூ.10,495 தான்) இரண்டாம் கட்ட கவுன்சலிங்கின்போது மாணவர்களைச் சேர்க்க அனுமதி உண்டா, இல்லையா என்பதை அதிகாரபூர்வமாக இதுவரை மருத்துவக் கவுன்சில் தெரிவிக்கவில்லை.

 இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சக உயர் அதிகாரிகளைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம். ஒருவேளை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அனுமதியை மத்திய அரசும் வழங்காவிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை'' என்று தமிழக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.