நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அணைக்கரை பாலம் சீரமைக்கப்படாததால் அவதியுறும் காவிரி டெல்டா பகுதி மக்கள்

சென்னை, ஏப். 19: சென்னை} கும்பகோணம் சாலையில் திருப்பனந்தாள் அருகே அமைந்துள்ள அணைக்கரை பாலம் சேதமுற்று ஓராண்டுக்கும் மேலாகியும் இன்னமும் சீரமைக்கப்படவில்லை.  இதனால் காவிரி டெல்டா பகுதியான தஞ்சாவூர், தி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:32 am

ச. குமரன்

சென்னை, ஏப். 19: சென்னை} கும்பகோணம் சாலையில் திருப்பனந்தாள் அருகே அமைந்துள்ள அணைக்கரை பாலம் சேதமுற்று ஓராண்டுக்கும் மேலாகியும் இன்னமும் சீரமைக்கப்படவில்லை.

 இதனால் காவிரி டெல்டா பகுதியான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், வணிகர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு சென்று திரும்ப மிகவும் அவதிப்படுகின்றனர்.

 கடந்த 2008}ம் ஆண்டில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கரை பாலத்தில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டன.

 பஸ்கள் செல்லத் தடை: பழுதடைந்த இந்தப் பாலத்தின் வழியாக பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. கார்கள், இரு சக்கர வாகனங்கள் மட்டுமே இப் பாலத்தின் மீது செல்ல இப்போது அனுமதிக்கப்பட்டு வருகிறது.  இந்த வழித்தடத்தில் மேலும் 2 புதிய பாலங்களைக் கட்ட நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 ஆனால், அணைக்கரைப் பாலம் சேதமுற்று ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னமும் சீரைமக்க அரசு நிதி ஒதுக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. அணைக்கரைப் பாலத்தில் பஸ்கள் செல்ல அனுமதிக்கப்படாததால், சென்னையில் இருந்து கும்பகோணம் செல்ல வேண்டிய அரசு மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

கூடுதல் கட்டண வசூல்: இதனால், சுமார் 80 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றுப்பாதையில் பஸ்கள் செல்வதால், பயண நேரம் அதிகரிக்கிறது.

 சென்னை} கும்பகோணம் வழித்தடத்தில் பயண நேரம் முன்பு 6 மணி நேரமாக இருந்தது. இப்போது இது 9 மணி நேரமாக அதிகரித்துள்ளது. மழைக்காலத்தில் பஸ்கள் மிகவும் தாமதமாகச் செல்லும் நிலை உள்ளது. பயண தூரம் அதிகரித்துள்ளதால் அரசு பஸ்களில் சாதாரணமாக ரூ. 120 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் ஆம்னி பஸ்களில் ரூ. 250 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 விழுப்புரம்} மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில் சேவை எப்போது?: விழுப்புரம்} மயிலாடுதுறை இடையே அகலப் பாதைப் பணிகள் நடைபெற்றதன் காரணமாக இந்த வழித்தடத்தில் முன்பு இயக்கப்பட்ட கம்பன், சேது உள்ளிட்ட விரைவு ரயில் மற்றும் பாசஞ்சர் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.

 இதனால், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல,  சென்னை எழும்பூர்} கும்பகோணம் இடையே இப்போது தினமும் இயக்கப்படும் மலைக்கோட்டை விரைவு ரயிலை மட்டுமே காவிரி டெல்டா பகுதி மக்கள் நம்பியுள்ளனர். இதனால், இந்த ரயில் தினமும் நிரம்பி வழிகின்றது.

விழுப்புரம்} மயிலாடுதுறை இடையே இப்போது அகலப் பாதைப் பணிகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதி வழங்கப்பட்ட பின்னரும் இந்த வழித்தடத்தில் ரயில் சேவைகளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை} கும்பகோணம் வழித்தடத்தில் போதிய மாற்று போக்குவரத்து வசதி இல்லாத நிலை உள்ளது.

 கோடை சிறப்பு ரயில்: புறக்கணிக்கப்படும் டெல்டா பகுதி: சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 100}க்கும் மேற்பட்ட கோடைகால சிறப்பு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

 ஆனால், காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளுக்கு ஒரே ஒரு சிறப்பு ரயில் சேவை கூட இதுவரை அறிவிக்கப்படவில்லை. பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது சென்னை} கும்பகோணம் பகுதிக்கு இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும் நெரிசல் அதிகரித்துள்ளது.

 இப் பிரச்னைகளால் முதல்வர் கருணாநியின் சொந்த மாவட்டமான திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.