எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கொடைக்கானலில் பொய்த்துப்போன பருவமழை: பேரிக்காய் விளைச்சல் குறைவால் விவசாயிகள் பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் பருவமழை பொய்த்ததால் பேரிக்காய் விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.   கொடைக்கானல் சுற்றுலாத் தலம் மட்டுமல்ல. இங்கு பல்வேறு காய்கறிகள்,

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:59 am

ஏ. ஆரோக்கியசாமி

கொடைக்கானல்: கொடைக்கானலில் பருவமழை பொய்த்ததால் பேரிக்காய் விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  கொடைக்கானல் சுற்றுலாத் தலம் மட்டுமல்ல. இங்கு பல்வேறு காய்கறிகள், பழ வகைகள் விளைகின்றன. இதில் பேரிக்காய் முக்கியப் பங்காகும்.

  பேரிக்காய் விளைவதற்கு அதிக மழை தேவை. எவ்வளவு மழை பெய்தாலும் அவற்றை தாங்கிக் கொள்ளும் தன்மையும் அதிகமாக விளைச்சலும் இருக்கும். பேரிக்காயில் தண்ணீர் பேரி, முள்பேரி, நாட்டுப்பேரி, சீனி பேரி, ஊட்டி பேரி ஆகியன உள்ளன.

  பேரிக்காயானது கொடைக்கானல் பகுதிகளான அட்டுவம்பட்டி ,வில்பட்டி, பள்ளங்கி, கோம்பை, மாட்டுப்பட்டி, நாயுடுபுரம், சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், செண்பகனூர், பிரகாசபுரம், சகாயபுரம், பாம்பார்புரம், அப்சர்வேட்டரி, வட்டக்கானல், பேத்துப்பாறை உள்பட பல்வேறு பகுதிகளில் பேரிக்காய் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

   கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆயிரக்கணக்கான ஏக்கர் மரங்களில் பேரிக்காய்கள் விளைவிக்கப்பட்டன. இவற்றை எடுப்பதற்கு கொடைக்கானலில் 4 மாதங்களாக பல இடங்களிலிருந்து நூற்றுக்கணக்கான கூலியாட்கள் வருவது வழக்கம். இதனால் வேலை வாய்ப்பும் கிடைத்தது.

   பேரிக்காய் பருவகாலம் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் ஆகும். சீசன் காலங்களில் ஓரளவு மழையும், அதன் பின் ஜூன், ஜூலையில் நல்ல பருவமழையும் பெய்தால் விளைச்சல் அதிகமாக இருக்கும்.

   10 ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானலில் பேரிக்காய் ஒரு நாளைக்கு 50 லாரி முதல் 60 லாரிகள் வரை செல்லும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வருவதால் ஒரு நாளைக்கு 15 முதல் 20 லாரிகளில் மட்டுமே பேரிக்காய்கள் செல்கின்றன.

  கொடைக்கானலில் விளையும் பேரிக்காய் தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற வெளிமாநிலங்களுக்கும் செல்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் ஒரு சிப்பம் விலை (45 கிலோ) ரூ.600 முதல் ரூ.750 வரை விற்கப்பட்டது. தற்போது ஒரு சிப்பம் ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது.

    கொடைக்கானலில் உள்ள பேரி மரங்கள் கடந்த 60 முதல் 75 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட மரங்களிலிருந்துதான் உற்பத்தி ஆகிறது. ஆனால் தற்போது பேரி மர நாற்றுகளை வைப்பதற்கு கொடைக்கானலில் விவசாய நிலங்கள் இல்லை. குறைந்த

அளவு நிலம் உள்ள விவசாயிகளும் பேரி நாற்றுகளை வைப்பதற்கு விருப்பமில்லாமல் உள்ளனர்.

இதனால் கொடைக்கானலில் பேரிக்காய் இன்னும் 5 ஆண்டுகளில் முழுமையாக இல்லாத சூழ்நிலை உருவாகும் எனத் தெரிகிறது.

   எனவே, கொடைக்கானலில் உள்ள தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இது குறித்து விவசாயிகளுக்கு பேரி நாற்றுகள் வழங்கி உற்பத்தியைப் பெருக்க வேண்டும். இவற்றைப் பராமரிப்பது சுலபம். செலவும் குறைவு.  

   இதன் உற்பத்தியை பெருக்கினால் பேரிக்காயிலிருந்து ஜாம் தயாரிக்கலாம்.

இதனால் வேலைவாய்ப்பு உருவாகும். பேரிக்காய் சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய சக்தி பேரிக்காய்க்கு உண்டு. இவற்றை கேரள மக்கள் அதிகமாக விரும்புவர். இவை கேரளத்துக்குத்தான் அதிகமாக கொண்டு செல்லப்படுகிறது.

   இது குறித்து செண்பகனூர் விவசாயி நாகராஜன் கூறியது:

   கொடைக்கானலில் சில ஆண்டுகளுக்கு முன் அதிகமான பேரிக்காய் விளையும்.

நல்ல மழை பெய்யும். மழைக் காலங்களில்கூட நாங்கள் பேரிக்காய் எடுப்போம்.

பல இடங்களிலிருந்து வேலையாட்கள் வருவர். இதனால் வேலைவாய்ப்பு இருந்தது. ஆனால் சில ஆண்டுகளாக போதுமான மழை இல்லை. பேரிக்காய் விளைச்சலும் இல்லை. விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வருவதால் பேரி மரங்கள் அழிந்து வருகின்றன.

   பேரி நாற்றுகளை விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையினர் கொடுத்து அவற்றின் உற்பத்தியைப் பெருக்க வழி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையெனில் வருங்காலங்களில் கொடைக்கானலில் மருந்துக்குக்கூட பேரிக்காய் இருக்காது எனத் தெரிகிறது என்றார்.

பேரிக்காய்களை தரம் பிரித்து மார்க்கெட்டுக்கு அனுப்பும் விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.