பள்ளிக்கூடம் மூடப்பட்டுள்ளதால் இந்த மக்கள் காட்டுக்குச் செல்லும்போது தங்கள் குழந்தைகளையும் அழைத்துச் செல்கின்றனர். இதனால் இக்குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்குழந்தைகளுக்கு உணவு கிடைப்பது நின்றுவிட்டதால் மலைகளில் பறித்துவந்த கிழங்குகளை கொண்டு கூழ் வைத்துச் சாப்பிட்டுள்ளனர். மையத்தை நடத்துவோரிடம் இதுகுறித்து கேட்டதற்கு, உண்டு, உறைவிடப் பள்ளியை நடத்துவதற்கு நிதியில்லை எனத் தெரிவித்துள்ளனர். ரேஞ்சர் தர்மராஜ் கூறும்போது, இந்தப் பள்ளி சரியாகச் செயல்படாத நிலையில், ஆண்டிபட்டி பஞ்சாயத்து மூலம் இந்த இடத்தில் பால்வாடி மையம் துவக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே, இங்கு விரைவில் அங்கன்வாடி மையம் துவக்கப்படும் என்றார்.