சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காலமாற்றத்தால் கரையும் சுண்ணாம்புச் சூளைகள்!

பல்லடம்: காலமாற்றத்தால் சுண்ணாம்புச் சூளைகள் மெல்ல அழிந்து வருகின்றன. பாரம்பரியமான குடிசைத்தொழில் நலிவடைந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. ÷பொங்கல் பண்டிகை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வீட்டுக்கு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:54 am

எ.குணசேகரன்

பல்லடம்: காலமாற்றத்தால் சுண்ணாம்புச் சூளைகள் மெல்ல அழிந்து வருகின்றன. பாரம்பரியமான குடிசைத்தொழில் நலிவடைந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

÷பொங்கல் பண்டிகை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வீட்டுக்கு வெள்ளை அடித்து தூய்மைப்படுத்துவதுதான். இதற்கான பணிகளை மார்கழி துவங்கியவுடனேயே துவங்கிவிடுவர்.

÷வெள்ளை அடிக்க சுண்ணாம்புச் சூளைகளில் சுண்ணாம்புக் கல் வாங்கியது ஒரு காலம். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னரும்கூட,சுண்ணாம்புச்சூளைகளில் முன்கூட்டியே சொல்லிவைத்து சுண்ணாம்புக்கல் வாங்க வேண்டியிருந்தது. பண்டிகைக்காலங்களில் அதற்கு கிராக்கி அதிகம்.

÷பல்லடத்தில் 5க்கு மேற்பட்ட சூளைகள் இருந்தன. இன்று ஒரு சூளைகூட இல்லை. தங்கள் தொழில் நசிவு குறித்து, பல்லடம் அருகிலுள்ள கோவில்பாளையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சூளைத் தொழில் நடத்தி வரும் சண்முகம் கூறியது:

÷முன்னெல்லாம் இந்த சீசனில் தினசரி ஒரு டன் அளவுக்கு சுண்ணாம்புக் கல் விற்பனை நடக்கும். ஆனால் இன்று ஒரு நாளைக்கு 30 சட்டிகூட விற்பனையாவதில்லை. அனைவரும் ஒயிட் சிமென்டுக்கு மாறிவிட்டனர். கையை ஓட்டையாக்கும் சுண்ணாம்புக் கல் மூலம் வெள்ளை அடிக்க தொழிலாளர்களும் முன்வருவதில்லை.

÷கோழிப்பண்ணைகளுக்கு கிருமி நாசினியாக சுண்ணாம்புத் துகள்கள் தேவைப்படுவதால்தான், இத்தொழில் இப்போது பெயரளவுக்கு நடக்கிறது. பழைய கட்டடங்களை இடித்தால் சுண்ணாம்பு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருளான ஒடைக்கல்லை இலவசமாக எடுத்து செல்லுமாறு சொன்ன காலம் உண்டு. இன்று ஒடைக்கல் கிடைப்பதே சிரமமாக உள்ளது.

÷கடந்த ஆண்டு ஆயிரம் கிலோ ரூ. 500க்கு விற்றது தற்போது ரூ. 700 ஆக விலை உயர்ந்து விட்டது. அதேபோல் சூளையில் வேலை செய்ய யாரும் முன்வருவதில்லை. வடகிழக்கு மாநிலப் பகுதிகளிலிருந்து நிறைய இளைஞர்கள் வேலை கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு தினசரி ரூ. 150 கூலி கொடுத்து இலவசமாக தங்குமிடம் கொடுத்துள்ளதால் வேலை செய்கின்றனர்.

÷சுண்ணாம்புகல்லை சூரியநல்லூர் பகுதியிலிருந்து லாரிகள் மூலம் கொண்டு வரவேண்டும். இதற்கு பர்மிட் உள்பட 3 ஆயிரம் செலவு ஆகும். இந்த விலையில் வாங்கிவந்து தொழில் செய்ய முடியாது.

÷எனவே தமிழக அரசு அழிந்துகொண்டு இருக்கும் சுண்ணாம்புச் சூளைத் தொழிலை பாதுகாக்க சலுகைகள் வழங்க வேண்டும். இல்லையெனில், தற்போதைய சுண்ணாம்புச் சூளைகள் வருங்காலத் தலைமுறைக்கு நினைவு சின்னங்களாக மாறும் நிலை வெகுதூரத்தில் இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.