இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்கேரளத்தில் காங்கிரஸ் வெல்லும்; நாளை பிற்பகலுக்குள் வெற்றி உறுதியாகிவிடும் - சசிதரூர்பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை
/

எனக்காகப் பாடினார் எம்.ஜி.ஆர்.: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்

சென்னை, ஜன.11: "என்ன தான் நடக்கும், நடக்கட்டுமே!' என்ற பாடல் எனக்காக எம்.ஜி.ஆர். பாடினார்'' என்று முதல்வர் கருணாநிதி கூறினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது எத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:45 am

சென்னை, ஜன.11: "என்ன தான் நடக்கும், நடக்கட்டுமே!' என்ற பாடல் எனக்காக எம்.ஜி.ஆர். பாடினார்'' என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா திங்கள்கிழமை பேசினார்.

காலை 11.09 மணிக்கு தனது பேச்சைத் தொடங்கிய ஜெயலலிதா, நண்பகல் 12.15 மணிக்கு முடித்தார். முடிக்கும் போது திமுக ஆட்சி குறித்து விமர்சித்த அவர், "என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே!' என்ற பாடலைப் பாடினார்.

இதன்பின்பு, பேரவையில் உரையாற்றிய முதல்வர் கருணாநிதி, ""எம்.ஜி.ஆர். தனக்காக இந்தப் பாடலைப் பாடினார்'' என்று தெரிவித்தார்.

அவர் பேசுகையில், ""எதிர்க்கட்சித் தலைவர் தன்னுடைய உரையின் இறுதியில் எம்.ஜி.ஆர். பாடலை இங்கே சொன்னார்கள். அந்தப் பாட்டு அவர்களுக்காகப் பாடியதல்ல.

எனக்குத் தெரியும், எம்.ஜி.ஆர். என்னை மனதிலே கொண்டு பாடிய பாடல் அது. ஏனென்றால் என்னுடைய 40 ஆண்டு கால நண்பர் அவர். இன்னும் சொல்லப் போனால், திமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்றபோது, தலைவராக நான் தான் வரவேண்டுமென்று எண்ணி அதற்காகப் பாடுபட்டவர். அதற்காக ஆட்களைச் சேர்த்தவர்.

அந்த நன்றி எனக்கு உண்டு. சாகின்ற வரையிலே உண்டு. அதைபோல இந்தப் பொறுப்புக்கு நான் வர வேண்டுமென்று விரும்பியவர்களில் அவரும் ஒருவர். எனவே, எம்.ஜி.ஆர். பாடிய பாடலை நான் இப்படி கருதிக் கொள்கிறேன். அந்தப் பாடலில் "தலைவன் இருக்கின்றான் மயங்காதே' என்று வரும் வரி, என்னைக் குறிப்பிட்டுத் தான் சொல்கிறார். தலைவி இருக்கிறார் மயங்காதே எனச் சொல்லவில்லை'' என்றவுடன் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.