எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கழிவுநீர் கலக்கும் ராமானுஜர் கோயில் குளம்

ஸ்ரீபெரும்புதூர், ஜூலை 17: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் ராமானுஜர் கோயில் குளத்தில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கலப்பதால் குளம் மாசடைந்து வருகிறது. ÷நகரின் மையப்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:42 am

எல். ஐயப்பன்

ஸ்ரீபெரும்புதூர், ஜூலை 17: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் ராமானுஜர் கோயில் குளத்தில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கலப்பதால் குளம் மாசடைந்து வருகிறது.

÷நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது ராமானுஜர் கோயில் குளம். கோடை காலங்களிலும் வற்றாமல் ஜீவ ஊற்றாகவும் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

÷இத் திருக்குளத்தில் நீராடி விட்டு அருகில் உள்ள ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஸ்ரீபாக்கியகார சுவாமியை வணங்கினால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இப்படி எண்ணற்ற பெருமைகளை கொண்ட குளம்தான் இப்போது சிறுமைப்பட்டுக் கிடக்கிறது.

÷மழைக் காலங்களில் ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து ராமானுஜர் கோயில் குளத்திற்கு நீர் வருவதற்கு கால்வாய் உள்ளது. இக் கால்வாய் இப்போது குளத்தைச் சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுமக்கும் கால்வாயாக மாற்றப்பட்டுவிட்டது.

÷அழுக்குத் துணி துவைக்கும் இடமாக குளத்தின் படித்துறை பயன்படுத்தப்படுகிறது. இரவு நேரங்களில் குளக்கரையில் அமர்ந்து மது அருந்தும் குடிமகன்கள் பிளாஸ்டிக் தம்ளர்கள், தண்ணீர் பாக்கெட்டுகளை குளத்திற்குள் வீசிச் செல்கின்றனர்.  

÷இதனால் ஏற்கெனவே நாறிப்போன குளத்து நீரில் இப்போது கழிவு நீரும் கலப்பதால் தண்ணீரின் நிறம் மாறி பச்சை நிறமாக காட்சியளிக்கிறது குளம். மேலும் நீர் மாசடைவதன் காரணமாக  அவ்வப்போது மீன்கள் செத்து மிதக்கின்றன.

  ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்துக்கு வரும் வெளியூர் பக்தர்கள் குளத்தின் தன்மையைக் கண்டு நீராட முடியாமல் முகம் சுளித்து செல்கின்றனர்.

÷குளத்தில் கழிவு நீர் கலப்பதை தடுக்காத வரை இந்த அவலம் தொடரும். வீடுகளிலிருந்து வெளியேறும் நீரை வேறுபக்கம் திருப்பிவிட வேண்டும். அதேநேரத்தில் குளத்தைப் பராமரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நீராதாரத்தை அசுத்தமாக்குவது நம்மை நாமே அசுத்தப்படுத்தி கொள்வதாகும்.

÷எனவே பேரூராட்சி நிர்வாகமோ, கோயில் நிர்வாகமோ உடனடி நடவடிக்கை எடுத்து பக்தர்களின் கோரிக்கையை தீர்க்க வேண்டும் என்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.