எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கொடைக்கானல் கூக்கால் கிராமத்தில் அடிப்படை வசதியின்றி அவதிப்படும் மக்கள்

கொடைக்கானல் : கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் கிராமத்தில் அடிப்படை வசதியில்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். கொடைக்கானலிலிருந்து சுமார் 45 கி.மீ. தூரம் உள்ளது கூக்கால் பஞ்சாயத்து கிராமம் . இந்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:53 am

ஏ. ஆரோக்கியசாமி

கொடைக்கானல் : கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் கிராமத்தில் அடிப்படை வசதியில்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

கொடைக்கானலிலிருந்து சுமார் 45 கி.மீ. தூரம் உள்ளது கூக்கால் பஞ்சாயத்து கிராமம் . இந்தக் கிராமம் குண்டுபட்டி, விடுதலை நகர், பழம்புத்தூர், புதுப்புத்தூர், ஏ.காலனி, பி.காலனி உள்பட சிறு கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு சுமார் 9 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்  வாக்குரிமை பெற்றுள்ளனர். கிராமத்தில் 4 பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இங்குள்ள மக்களின் மிக முக்கியத் தொழில் விவசாயம். இப்பகுதியில் உருளை, பீன்ஸ், கேரட், பட்டாணி, முள்ளங்கி போன்றவை பயிரிடப்படுகிறது. இங்குள்ள மக்கள் ஆண்டு முழுவதும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். விளைபொருள்கள் மதுரை, தேனி, திருச்சி போன்ற வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கொடைக்கானலிலிருந்து கூக்கால் கிராமத்திற்கு செல்வதற்கு போதுமான பஸ் வசதி இóல்லை. சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இப் பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் போக்குவரத்தில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டால், கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு செல்ல வேண்டும். அங்கு முதலுதவி மட்டும் அளித்து அதன் பின் தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற இடங்களிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்கின்றனர். இதனால் பலர் உயிரிழந்துள்ளனர்.

விடுதலை நகர், ஏ.காலனி, பி.காலனி போன்ற பகுதிகளில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாலை, மின் வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். விளைபொருள்களை தலைச் சுமையாகவே கொண்டு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மழை நீர் செல்வதற்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் இப் பகுதிகளில் தேங்கும் மழை நீரைக் கடந்து வரவேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து இப் பகுதி கிராம மக்கள் கூறியதாவது:

கூக்கால் விடுதலை நகர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இப் பகுதிகளில் சரியான சாலை வசதியில்லை. யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் டோலி கட்டி தூக்கிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. ஊருக்கு மத்தியில் பொதுக் கிணறு உள்ளது. இந்த கிணற்று நீரைத்தான் குடிநீராகப் பயன்படுத்துகிறோம். மழைக் காலங்களில் இந்தக் கிணற்றில் சாக்கடை நீர் கலக்கிறது. இந்த நீரைப் பயன்படுத்தி வருவதால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறோம். இது குறித்து பல முறை இதற்கு முன் இருந்த தலைவரிடமும், தற்போதுள்ள தலைவரிடமும் கூறியும் இதுநாள் வரை  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இங்குள்ள ரேஷன் கடை மாதத்தில் சில நாள்கள் மட்டும் செயல்படுவதால், ரேஷன் பொருள்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. குறைந்த அழுத்த மின்சாரம் மட்டுமே வரும் பல நாள்களில் முற்றிலுமாக மின் தடை ஏற்படும். இப் பிரச்னை குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து கூக்கால் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:

கூக்கால் பஞ்சாயத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. குக்கிராமப் பகுதிகளில் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என ஆய்வு நடைபெற்று வருகிறது.

மழைநீர் செல்லும் சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் குடிநீர் கிணற்றில் மழை நீர் கலந்து வருகிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க வழி செய்யப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.