எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கும் சின்னசேலம் பஸ் நிலையம்

கள்ளக்குறிச்சி, மே 15:  சின்னசேலம் பஸ் நிலையத்தின் உள்ளே ஆட்டோ ஸ்டேண்டு, இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதால் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகமோ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:17 pm

எஸ். முரளி

கள்ளக்குறிச்சி, மே 15:  சின்னசேலம் பஸ் நிலையத்தின் உள்ளே ஆட்டோ ஸ்டேண்டு, இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதால் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

இது குறித்து பேரூராட்சி நிர்வாகமோ, காவல் துறையினரோ கண்டு கொள்ளாததால் நெரிசலில் சிக்கி தவிக்கிறது சின்னசேலம் பஸ் நிலையம்.

சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்டது காமராஜர் பஸ் நிலையம் ஆகும். இந்த பஸ்  நிலையம் மிகவும் சிறியது ஆகும். இந்த பஸ் நிலையத்தில் வணிக வளாகக் கடைகள் கீழ்தளத்திலும், மேல் தளத்திலும் 30 கடைகள் உள்ளன.

இந்த பஸ் நிலையத்தின் பின்புறம் மாரியம்மன் கோயில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. பொதுமக்கள் பஸ் நிலையம் வழியாகத்தான் கடைவீதிக்கும் செல்வார்கள்.

பஸ் நிலையத்தில் கடைகளின் முன் இரு சக்கர வாகனங்களும், தள்ளு வண்டி வியாபாரிகள் வண்டியை நிறுத்திக் கொள்வதால் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

இந்த பஸ் நிலையம் சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இட நெருக்கடி காரணத்தினால் சேலம்-சென்னை செல்லும் பஸ்கள் நிலையத்துக்குள்ளே வராமலேயே சாலையின் இருபுறங்களிலும் நின்றவாறே சென்று விடுகின்றன.

பஸ் நிலையத்துக்குள் மினி பஸ்கள், கிராமப்புறங்களான நைனார்பாளையம், அலம்பலம், ஈரியூர், அம்மகளத்தூர் உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் பஸ் நிலையம் வழியே உள்ளே செல்ல வேண்டும்.

ஆனால் உள்ளே செல்வதற்கு ஆட்டோக்கள் இடைஞ்சலாக இருப்பதால் சில நகர பஸ்கள் பஸ் நிலையத்துக்கு வராமலேயே சாலையின் வெளியே நின்றபடியே செல்கின்றன.

பஸ் நிலைய அருகிலேயே 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஸ்டேண்டு  உள்ளது.

தற்போது புதிதாக ஸ்டேண்டு ஒன்றை பஸ் நிலைய வளாகத்தின் உள்பகுதியில் ஆட்டோக்காரர்கள் உருவாக்கியுள்ளனர். இதனால் அவ்வழியே மகளிர் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள், பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மிகவும் அல்லல்படுகின்றனர்.

கடைக்காரர்களும் கடைகளுக்கு முன் ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்துவதால் பொதுமக்கள் வெயில், மழை போன்ற நேரத்தில் நிற்கக் கூட இடமில்லாமல் தவியாய் தவித்து வருகின்றனர்.

இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்துக்கும், காவல் நிலையத்திலும் வாய்மொழி மூலமாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனினும் பேரூராட்சியினர் கண்டு கொள்ளாமலே அலட்சியமாக விட்டு விட்டனர். இது குறித்து பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ராஜவேலை தொடர்பு  கொண்டு கேட்டதற்கு, உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.