தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாலப் பணி நிறுத்தம்: மழையால் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம்

ஸ்ரீபெரும்புதூர் :  முடிச்சூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மலைப்பட்டு பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான பாலம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் பாலம் அருகே மாற்று பாதை அமைக்கப்பட்டது.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:07 pm

எல். ஐயப்பன்

ஸ்ரீபெரும்புதூர் :  முடிச்சூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மலைப்பட்டு பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான பாலம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் பாலம் அருகே மாற்று பாதை அமைக்கப்பட்டது.

÷தற்போது பெய்து வரும் தொடர் மழையால் மாற்று பாதையிலும் மழைநீர் செல்வதால் இச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

÷வண்டலூர் வாலாஜாபாத் சாலையையும், ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் சாலையையும் இணைக்கும் சாலை முடிச்சூர் ஸ்ரீபெரும்புதூர் சாலை.

÷இச்சாலையை பயண்படுத்திதான் காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்  பகுதிகளுக்கும் அதே போல் தாம்பரம் பகுதியில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர்.

÷இச்சாலை குண்டும் குழியுமாக மாறியதைத் தொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு நாவலூர் பகுதியில் இருந்து சேத்துப்பட்டு பகுதி வரை ரூ.3.45 கோடி மதிப்பீட்டிலும், சேத்துப்பட்டு பகுதியில் இருந்து கரசங்கால் பகுதி வரை ரூ.4.2 கோடி மதிப்பீட்டிலும் ஒருவழிச் சாலையில்  இருந்து இரண்டு வழிச் சாலையாக அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டது. ஆனால் சாலை சீரமைக்கபட்டபோது, மலைப்பட்டு பகுதியில் உள்ள ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்கும் பழமையான மலைப்பட்டு பாலத்தை புதிதாக கட்டாமல் பேட்ஜ் மட்டும் செய்து சீரமைத்தனர் நெடுஞ்சாலைத் துறையினர்.

÷இந்நிலையில் சாலை சீரமைக்கபட்டவுடன் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் அதிக அளவில் இச்சாலையில் செல்ல ஆரம்பித்தன.

÷அதன் காரணமாக மலைப்பட்டு பகுதியில் உள்ள பழமையான பாலம் வலுவிழந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பாலத்தின் மைய பகுதி இடிந்து விழுந்தது. இதனால் முடிச்சூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மூன்று நாள்களுக்கு முற்றிலுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

÷இதனால் இச்சாலையை பயன்படுத்தும் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் 30 கி.மீ. சுற்றிக் கொண்டு ஒரகடம் வழியாக ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

÷இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் பாலத்தின் அருகில் மலைமண் மற்றும் கற்களை கொட்டி மாற்றுபாதை ஏற்படுத்தினர். இந்த மாற்றுபாதை வழியைத்தான் கடந்த மூன்று மாதங்களாக மேற்கண்ட கிராமமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

÷ஆனால் தற்போது பயன்பட்டு வரும் மண்ணால் அமைக்கபட்ட இந்த மாற்று பாதை கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தாற்காலிக பாதையின் மீது ஒரு அடிக்கும் மேலாக பாதை தெரியாத வண்ணம் மழைநீர் செல்கிறது. மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் பாற்று பாதையில் செல்லும் மழைநீரின் அளவும் அதிகரிக்கும். இதனால் முடிச்சூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்குப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

÷இது குறித்து கோட்ட பொறியாளர் லோகநாதனிடம் கேட்டதற்கு, "நபார்டு திட்டம் மூலம் மலைப்பட்டு பகுதியில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்ட டெண்டர்  விடப்பட்டுள்ளது.

÷விரைவில் பணிகள் தொடங்கும். தற்போது மாற்று பாதையில் மழைநீர் செல்லாமல் தடுப்பதற்ககாக பாதையில் மேலும் மலைமண் மற்றும் கற்களை கொட்டி பாதையை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

÷இதனால் தொடர்ந்து இந்த பாதையில் வாகனங்கள் சென்று வர முடியும்' என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.