புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தரமற்ற தாற்காலிக வீடுகள்: குடியேற மறுக்கும் மீனவர்கள்

சென்னை, அக். 14: மிகவும் தரமற்ற வகையில் தாற்காலிக குடியிருப்பு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதால், நொச்சிக்குப்பம் பகுதி மீனவர்கள் அதில் குடியேறாமல் புறக்கணித்து வருகின்றனர்.  ÷2004 டிசம்பரில

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:30 pm

ச. குமரன்

சென்னை, அக். 14: மிகவும் தரமற்ற வகையில் தாற்காலிக குடியிருப்பு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதால், நொச்சிக்குப்பம் பகுதி மீனவர்கள் அதில் குடியேறாமல் புறக்கணித்து வருகின்றனர்.

 ÷2004 டிசம்பரில் சுனாமியால் மெரினா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள மீனவக் குடியிருப்புகளான நொச்சிக்குப்பம், டுமிங் குப்பம், முல்லை மாநகர், திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 32 பேர் உயிரிழந்தனர்.

 ÷இதில் மீனவர்களின் வீடுகள் பலத்த சேதமுற்றதோடு, படகுகள், வலைகளையும் இழந்து மீனவர்கள் தவித்தனர்.

 ÷இந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவ மக்களுக்காக உலக வங்கியின் நிதியுதவியுடன் அவசர சுனாமி மறு குடியமர்வுத் திட்டத்தின் கீழ் 1,452 அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளை கட்ட அரசு அனுமதி வழங்கியது.

 ÷இந்தத் திட்டப் பணிகளை நிறைவேற்ற, குடிசை மாற்று வாரியம் ஒப்பந்ததாரர்களைத் தேர்வு செய்து அனுமதி அளித்தது. இதன்படி கட்டுமானப் பணிகள் தொடங்கிய ஓராண்டுக்குள் முழுமையாக இப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 ÷இப் பணி முடியும்வரை தங்குவதற்காக 1,050 தாற்காலிக வீடுகள் கட்டப்பட்டன.

 ÷ஆனால், மீனவர்கள் தாற்காலிக வீடுகளுக்கு குடியேறி, இப்போது இருக்கும் இடத்தை முழுமையாக காலி செய்து கொடுக்காததால், உலக வங்கியின் நிதியுதவியுடன் ரூ.83.27 கோடியில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டம் தேக்க நிலையில் உள்ளது.

 இதன் காரணமாக திட்டச் செலவும் பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 ÷மீனவர்களுக்காக ஏற்கெனவே பல லட்சம் ரூபாய் செலவில் தரமற்ற வகையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,050 தாற்காலிக வீடுகளும் சேதமுற்று வருகின்றன.

 வசதியற்ற வீடுகள்: இந்த வீடுகள் மிகவும் குறுகலான பரப்பில் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளால் வேயப்பட்டு, சுற்றுச் சுவர் கூட இல்லாமல் கூடாரங்கள் போல அமைக்கப்பட்டுள்ளன.

 ÷போதிய காற்றோட்ட வசதிக்கு ஜன்னல்களும் இல்லை. வெயில் கொளுத்தும் காலங்களில் குழந்தைகள், பெண்கள் இந்த வீடுகளில் சில நிமிடங்கள் கூட தங்கியிருக்க இயலாத அவல நிலை உள்ளது. பொதுக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ள போதும், தண்ணீர் வசதி எதுவும் இல்லாத நிலை உள்ளது.

 ÷ஒரு வழிப் பாதையுடன் மிகவும் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ள இந்த வீடுகளில் தீ விபத்து நேரிட்டால், தப்பியோடி உயிர் பிழைக்கவும் வழியில்லை.

 ÷இதனால், முள்வேலி முகாம்களைப் போல அமைக்கப்பட்டுள்ள இந்தக் குடியிருப்புகளில் உள்ள வீடுகள் மிகவும் தரமற்றுள்ளதால் மீனவ மக்களில் பெரும்பாலானோர் குடியேற விரும்பவில்லை என்று நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த ஜெகன் மற்றும் தேசா பாணி ஆகியோர் தெரிவித்தனர்.

 ÷இதன் காரணமாக இந்த வீடுகள் இப்போது சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறி விட்டன. மெரினா கடற்கரை உள்பட சென்னையின் சின்னஞ்சிறு இடங்களைக் கூட பல கோடி ரூபாய் செலவில் அரசு அழகுபடுத்தி வருகிறது.

 ÷ஆனால், ஆண்டுதோறும் அரசுக்கு பல கோடி ரூபாய் அன்னியச் செலாவணி ஈட்டித் தரும் மீனவர்களுக்கு வசிப்பிடம் வழங்குவதில் அலட்சியம் காட்டலாமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.