எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இடிந்து விழுந்த பாலம்: இனியாவது சீரமைக்கப்படுமா?

ஸ்ரீபெரும்புதூர், ஆக.31:  மூன்று மாதங்களுக்கு முன், முடிச்சூர்}ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மலைப்பட்டு பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான பாலம், இடிந்து விழுந்தது. ஆனால் இது வரை அப்பாலத்தை சீரமைக்காததால் வாக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:11 pm

எல். ஐயப்பன்

ஸ்ரீபெரும்புதூர், ஆக.31:  மூன்று மாதங்களுக்கு முன், முடிச்சூர்}ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மலைப்பட்டு பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான பாலம், இடிந்து விழுந்தது. ஆனால் இது வரை அப்பாலத்தை சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

வண்டலூர்}வாலாஜாபாத் சாலையையும், ஸ்ரீபெரும்புதூர் } குன்றத்தூர் சாலையையும் இணைக்கும் சாலை முடிச்சூர் ஸ்ரீபெரும்புதூர் சாலை.

இச்சாலையை பயன்படுத்திதான் காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கும் அதே போல் தாம்பரம் பகுதியில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கும் சென்று வருகின்றன.

இச்சாலை குண்டும் குழியுமாக மாறியதைத் தொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு நாவலூர் பகுதியில் இருந்து சேத்துப்பட்டு பகுதி வரை  3.45 கோடி மதிப்பீட்டிலும், சேத்துப்பட்டு பகுதியில் இருந்து கரசங்கால் பகுதி வரை  4.2 கோடி மதிப்பீட்டிலும், ஒரு வழிச் சாலையில் இருந்து இரண்டு வழிச் சாலையாக அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டது.

ஆனால் சாலை சீரமைக்கபட்டபோது மலைப்பட்டு பகுதியில் உள்ள ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்கும் பழமையான பாலத்தை புதிதாக கட்டாமல் பேட்ச் மட்டும் செய்து சீரமைத்தனர் நெடுஞ்சாலைதுறையினர்.

இந்நிலையில் சாலை சீரமைக்கபட்டவுடன் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் இச்சாலையில் செல்ல ஆரம்பித்தன. அதன் காரணமாக மலைப்பட்டு பகுதியில் உள்ள பழமையான பாலம் வலுவிழந்து மூன்று மாதங்களுக்கு முன் பாலத்தின் மைய பகுதி இடிந்து விழுந்தது.

இதனால் முடிச்சூர்}ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மூன்று நாள்களுக்கு முற்றிலுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் இச்சாலையை பயன்படுத்தும் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ}மாணவிகள், தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் 30 கி.மீ. சுற்றிக் கொண்டு ஒரகடம் வழியாக ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் பாலத்தின் அருகில் மலை மண்ணை கொட்டி மாற்றுபாதை ஏற்படுத்தினர். இந்த மாற்றுபாதை வழியாகத்தான் கடந்த மூன்று மாதங்களாக ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து தாம்பரம் வரும் வாகனங்களும் சென்று வருகின்றன. ஆனால் தற்போது மண்ணால் அமைக்கபட்ட இந்த மாற்று பாதை மழைக்காலங்களில் பாலத்தின் வழியாக வரும் மழை நீரில் மூழ்கிவிடும்.

இதனால் முடிச்சூர் }ஸ்ரீபெரும்புதூர் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்படும் நிலை உள்ளது.

இது குறித்து கோட்ட பொறியாளர் லோகநாதனிடம் கேட்டதற்கு, "நபார்டு திட்டம் மூலம் மலைப்பட்டு பகுதியில்  1 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்ட திட்டம் தீட்டப்பட்டு வருகிறது, பணிகள் விரைவில் தொடக்கப்படும்' என தெரிவித்தார்.

எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன் மலைப்பட்டு பகுதியில் உள்ள பழமையான பாலத்தை உடனடியாக இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என இச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.