சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவில் தாமதம்

சுரண்டை:  திருநெல்வேலி மாவட்டம், வீ.கே. புதூர் சார்நிலைக் கருவூலத்துக்கு உள்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப் பதிவு செய்ய குறிப்பிட்ட ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மட்டுமே டி.டி. எடுக்க வேண

சுரண்டை:  திருநெல்வேலி மாவட்டம், வீ.கே. புதூர் சார்நிலைக் கருவூலத்துக்கு உள்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப் பதிவு செய்ய குறிப்பிட்ட ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மட்டுமே டி.டி. எடுக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

 தமிழக அரசு இப்போது சார்பதிவாளர் அலுவலகங்களில் செலுத்தவேண்டிய முத்திரைக் கட்டணம் | ஆயிரத்துக்கும் கூடுதலாக இருந்தால், வங்கி வரைவோலையாக (டி.டி.) செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.

 இந்நிலையில், வீரகேரளம்புதூர் சார்நிலைக் கருவூலத்துக்கு உள்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களான சுரண்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், ஊத்துமலை ஆகியவற்றில் இந்த முத்திரைத் தீர்வுக் கட்டணத்தை டி.டி.யாக செலுத்த, குறிப்பிட்ட ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் (கனரா வங்கி) மட்டுமே டி.டி. எடுக்க வேண்டும் என வீ.கே.புதூர் சார்நிலைக் கருவூலம் தெரிவித்துள்ளது.

 இவ் வங்கிக் கிளைகள் ஆலங்குளம் மற்றும் வீ.கே.புதூரில் மட்டுமே உள்ளன. எனவே, சுரண்டை, ஊத்துமலை மற்றும் பாவூர்சத்திரம் பகுதி மக்கள் பத்திரப் பதிவு செய்ய டி.டி. எடுக்க வேண்டுமெனில், வீ.கே.புதூர் அல்லது ஆலங்குளம் செல்லவேண்டியுள்ளது.

இதனால் பயணச் செலவும், கால விரயமும் ஏற்படுகின்றன.

   மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டி.டி. எடுக்க, வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளராக இருந்தால் ஒரு தொகையும், வங்கிக் கணக்கு இல்லாதவராக இருந்தால் கூடுதல் தொகையும் கமிஷனாக வசூலிக்கப்படுகிறது.

  ஏற்கெனவே பரபரப்பாகக் காணப்படும் இவ் வங்கியில், டி.டி. எடுக்க தாமதமாகிறது. காலையில் பணம் செலுத்தினால், சில நேரங்களில் மாலையில் வந்து டி.டி.யை வாங்கிச் செல்லுமாறு அலுவலர்கள் தெரிவிப்பதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

   இதனால், இப் பகுதியைச் சேர்ந்தோர் பத்திரப்பதிவு செய்ய வேண்டுமானால், முத்திரைத் தீர்வுக்குரிய தொகைக்கு முதல் நாளே டி.டி. எடுத்து, பின்னர் மறுநாள் பத்திரப் பதிவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

  எனவே, வீரகேரளம்புதூர் சார்நிலைக் கருவூலகத்துக்கு உள்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு செய்ய, குறிப்பிட்ட ஒரு வங்கியில் மட்டுமே டி.டி. எடுக்க வேண்டும் என்ற இப்போதுள்ள நிலையை மாற்றி, தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் டி.டி. எடுக்க சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com