மற்ற மாநில முதல்வர்களைவிட வசதி குறைவான வீட்டில் எளிமையாக வாழ்ந்து வருவதாகவும், அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும் அவர் கூறி இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. கருணாநிதிக்கு கோபாலபுரத்தில் ஒரு வீடு, சி.ஐ.டி. காலனியில் ஒரு பங்களா, மு.க. ஸ்டாலினுக்கு வேளச்சேரியில் ஒரு பங்களா, சென்னை போட் கிளப்பில் ஒரு மாளிகை, கலாநிதி மாறனுக்கு சென்னை போட் கிளப்பில் பிரமாண்டமான மாளிகை, தயாநிதி மாறனுக்கு போட் கிளப்பில் மிகப் பெரிய பங்களா, மகள் செல்விக்கு பெங்களூரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மாளிகைகள், பண்ணை வீடுகள், தென் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 25-க்கும் அதிகமான தொலைக்காட்சி சேனல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், பேரன் பெயரில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், சன் ஏர்லைன்ஸ், மு.க. அழகிரிக்கு மதுரையில் பல ஏக்கர் நிலங்கள், பண்ணை வீடுகள் வர்த்தக கட்டடங்கள், பொறியியல் கல்லூரி, மு.க. தமிழரசு, மு.க. முத்து, கனிமொழி என அனைவரும் மாட மாளிகைகளில் வாழ்ந்து வருகின்றனர்.