எத்தனை தொகுதிகள் அதிகரித்தாலும் தவெக வெல்லும்! தொகுதி மறுவரையறை குறித்து மரிய வில்சன்
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக அமைச்சர் மரிய வில்சன் பேசியது குறித்து...
மரிய வில்சன் - படம் | யூடியூப் / Tamilaga Vettri Kazhagam
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எத்தனை தொகுதிகள் அதிகரித்தாலும் தவெக வெற்றி பெறும் என நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இன்று (நவ. 29) தெரிவித்தார்.
2029 தேர்தலில் திமுகவால் வெற்றி பெற முடியாது என்றும் அக்கட்சியில் ஒருவரையும் விட்டுவைக்கப்போவதில்லை; ஊழல் செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
சென்னை பெரியமேட்டில் தவெக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திமுகவை விமர்சித்து அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது:
'' நம் கூட்டம் நடக்கும் நேரத்தில் வேறு ஒரு இடத்தில் வேறு ஒரு கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகள் அதிகரித்தாலும் தவெக வெல்லும்.
2029-ல் திமுகவால் வெற்றி பெற முடியாது. எத்தனை தொகுதிகள் அதிகரித்தாலும் சரி, குறைந்தாலும் சரி, உங்களால் வெற்றி பெற முடியாது. முதல்வர் விஜய்யின் கோட்டை தமிழ்நாடு.
நிதி ஆதாரங்களை நாம் படிப்படியாக அதிகரித்து வருகிறோம். தமிழ்நாட்டில் 6 மாதங்களில் சொந்த வரி வருவாய் 12.8% அதிகரித்துள்ளது.
ரூ. 1.7 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் ரூ. 1.20 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. வெளிப்படையான அரசாங்கம் நடப்பதால்தான் இது சாத்தியமாகியிருக்கிறது.
கடந்த ஆட்சியில் எந்தத் துறையில் ஊழல் நடந்தாலும் கொண்டுவாருங்கள். நடவடிக்கை எடுப்போம். அடுத்தடுத்த நாள்களில் இன்னும் அதிகமாக வழக்குகள் பதிவு செய்யப்படும். 2029-ல் தில்லிக்கே உங்களால் செல்ல முடியாது. அந்த நிலை ஏற்படும்'' என மரிய வில்சன் பேசினார்.
Summary
TVK will win regardless of how many constituencies are added Marie Wilson on constituency delimitation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


