தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதை தவிர தற்போது நமக்கு வேறு வழியில்லை என மு.க. ஸ்டாலின் பேட்டி...

மு.க. ஸ்டாலின் - எக்ஸ்
தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதை தவிர தற்போது நமக்கு வேறு வழியில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ. 29) தெரிவித்தார்.
ஜனவரிக்கு பிறகு தொகுதி மறுவரையறை வந்தால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என்பதாலும், தமிழ்நாடு நிச்சயம் பாதிக்கப்படும் என்பதாலும் மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகக் கூறினார்.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிப்பதாக அறிவித்திருந்த நிலையில், அம்முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இன்று மு.க. ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் பேசியது என்ன என்பது குறித்து மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
''தொடக்கத்தில் இருந்து நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளதை தெளிவாக எடுத்துக்கூறினேன்.
வேறு சில பிரச்னைகள் குறித்தும் பேசினார்கள். நாங்கள் அதை கேட்டுக்கொண்டோம்.
இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டால், தமிழ்நாட்டிற்கான குறைந்தபட்ச பாதுகாப்பைக் கூட இழந்துவிடுவோம் என்பதால் எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகக் கூறினோம்.
தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம். மசோதா நிறைவேற்றப்பட்டால் குறைந்தபட்ச பாதுகாப்பைக் கூட இழப்போம்.
தற்போது எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு நிச்சயம் பாதிக்கப்படும். தற்போதுள்ள எம்.பி.க்கள் இடம் குறையும். தென்மாநிலங்கள் மொத்தமாக பாதிக்கப்படும்.
மாநில கட்சிகளுக்கு இது வாழ்வா? சாவா? என்ற போராட்டம். அதை தடுக்க இப்போது கொண்டுவரப்படும் மசோதாவை ஆதரிப்பதை தவிர வேறுவழியே இல்லை.
காங்கிரஸிடம் வேறு திட்டமும் இல்லை. நாடாளுமன்றத்துக்கு எங்களுக்கு இருக்கும் பலத்தால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு அரசியல் வலிமையை காப்பாற்றியுள்ளோம். இதில் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க முடியாது.
அண்ணா தொடங்கிய கட்சி திமுக. கருணாநிதியைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலினாகிய நானும் மாநில உரிமையின் பக்கம் நிற்கிறேன். தமிழ்நாடு ஃபர்ட்ஸ்'' எனக் குறிப்பிட்டார்.
Summary
Constituency Delimitation: Tamil Nadu will be adversely affected! No choice but to support it: M.K. Stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

