ஒருமணி நேரத்திற்குப் பிறகு பேச்சுவார்த்தை நிறைவு! முடிவு என்ன?
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நடத்திவந்த பேச்சுவார்த்தை ஒருமணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது குறித்து...
இந்தியா கூட்டணித் தலைவர்களை வழியனுப்பி வைக்கும் மு.க. ஸ்டாலின் - எக்ஸ்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நடத்திவந்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன? என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிப்பதாக அறிவித்திருந்த நிலையில், அம்முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று மு.க. ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நாளை தாக்கலாக உள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு இந்தியா கூட்டணித் தலைவர்கள் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு முன்பு ஆதரவு தெரிவித்துவிட்டு, தற்போது எதிர்ப்பது ஏன்? என்பது தொடர்பாக மு.க. ஸ்டாலின் எடுத்துரைத்ததாகத் தெரிகிறது.
சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவரகள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை மு.க. ஸ்டாலின் வாசல் வரை வந்து வழியனுப்பிவைத்தார்.
Summary
Negotiations concluded after an hour What is the outcome
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

