தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

தொகுதி மறுவரையறையில் திமுக உறுதி! இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை தோல்வி?

மு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை குறித்து...

Party firm on fair delimitation, says DMK IT wing

மு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை - X | DMK IT Wing

Updated On :

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக திமுக ஐடி விங் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை (நவ. 30) தாக்கல் செய்யப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக திமுக அறிவித்திருந்தது.

இதனையடுத்து, திமுகவின் முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலினின் இல்லத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் வி.டி. சதீசன், மமதா பானர்ஜி, சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஏன் ஆதரவு அளித்தது என மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களை வாசல் வரை சென்று மு.க. ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுக எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக திமுகவின் ஐடி விங் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக அளித்த ஆதரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்திய இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Party firm on fair delimitation, says DMK IT wing

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.