தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மந்தகதியில் சாலைகள் சீரமைக்கும் பணி

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய சாலைகளான கொளத்தூர், மேட்டுக்கொளத்தூர் உள்ளிட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் அந்த சாலைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மிக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:14 am

எல். ஐயப்பன்

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய சாலைகளான கொளத்தூர், மேட்டுக்கொளத்தூர் உள்ளிட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் அந்த சாலைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ÷

 ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.35.7 லட்சத்தில் கொளத்தூர் மேட்டுக்கொளத்தூர் வரை மூன்று கிலோமீட்டர் சாலையும், அதே திட்டத்தில் எச்சூர் மேட்டுப்பாளையம் சாலையை ரூ.37 லட்சத்தில் சீரமைக்கவும், நபார்டு திட்டத்தில் ரூ.45 லட்சத்தில் எறையூர் சாலையை சீரமைக்கவும், கடுவஞ்சேரி ஒட்டங்கரனை சாலையை ரூ.16.16 லட்சத்தில் சீரமைக்கவும், கப்பாங்கோட்டூர் எலிமையான்கோட்டூர் சாலையை ரூ.24.48 லட்சத்தில் சீரமைக்கவும் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் மூலமாக ஒப்பந்தம் விடப்பட்டு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது.

 ÷சாலையைச் சீரமைக்க முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு நான்கு மாதங்களாகியும்

 இன்று வரை ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

 ÷இதனால் அந்த சாலைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

 எனவே இந்த சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 ÷இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்களிடம் கேட்டதற்கு, சாலைகளை சீரமைக்க ஒப்பந்தம் எடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் அரசியல்வாதிகள் என்பதால் அவர்களிடம் எதுவும் கேட்க முடிவதில்லை.

 மேலும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காகவே முதற்கட்ட பணிகள் கூட நிறைவேறாத நிலையிலும் 50 சதவிகிதம் வரை நிதி ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.