மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு

மேட்டூர், ஜன. 8: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ததைத் தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 5 ஆய
Updated on
1 min read

மேட்டூர், ஜன. 8: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

 டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ததைத் தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. பின்னர் நீரின் அளவு இம்மாதம் 5-ந் தேதி வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

 தற்போது காவிரி டெல்டா பகுதியில் மழை இல்லாத காரணத்தால் பாசனத் தேவை அதிகரித்துள்ளது. இதனால், சனிக்கிழமை மாலை முதல் பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 சனிக்கிழமை பகல் 12 மணிக்கு அணையின் நீர் மட்டம் 118.35 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,456 கன அடிவீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. நீர் இருப்பு 90.86 டி.எம்.சியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com