சென்னை,அக். 8: தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை திராவிட கட்சிகள் புறக்கணித்ததாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
சென்னை கே.கே.நகர் பகுதி 137-வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் க.அழகுவுக்கு வாக்களிக்கக் கோரி மார்க்சிஸட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சனிக்கிழமை பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியது: நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக 1992-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், திமுக, அதிமுக தலைமையிலான அரசுகள் இந்தச் சட்டத்தை நிறைவேற்றவில்லை.
அதற்கு பதிலாக 1919-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக கொண்டு வரப்பட்ட சட்டத்தை பின்பற்றி வந்துள்ளன.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய அதிகாரம் மற்றும் ஒதுக்கீட்டை வழங்காமல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் புறக்கணித்து வந்துள்ளன. அதேசமயம், உள்ளாட்சி அமைப்பில் உள்ள ஒப்பந்தப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியில் மட்டும் பங்கு போடுவதில் இரு கட்சிகளுக்கும் வேறுபாடில்லை.
திமுக-வுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே எந்த வித்தியாசமும் கிடையாது என திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு நிலைமை பரிதாபமாக இருந்தது. அதே போல் கடந்த ஆட்சியில் தான் வரலாறு காணாத வகையில் நில ஆக்கிரமிப்புகள் செய்ப்பட்டுள்ளன.
ஆனால், வாச்சாத்தி வழக்கில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது மார்க்சிஸ்ட்தான். உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுப்பதும் மார்க்சிஸ்ட்தான்.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் ஊழல் கூட்டணியை தோற்கடிப்பதற்காக அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்தோம். ஆனால், ஏறிவந்த ஏணியை அதிமுக எட்டி உதைத்துவிட்டது என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபி

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெற வேண்டும்: முன்னாள் வீரர்

குறைவான மின்செலவு... பட்ஜெட் விலையில் ஹையர் மைக்ரோவேவ் ஓவன்!
விடியோக்கள்

தனுஷ்க்கும் அரசியல் ஆசை| Valaipechu Anthanan Interview | Dhanush | National Film Award | TVK| CM Vijay



