/

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் சுங்க வரி வசூல் மையம்

 திருத்தணி, ஏப். 22: திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்குச் செல்லும் நுழைவுவாயிலில் உள்ள சுங்க வரி வசூல் மையம் திறக்கப்படாததால் ஊழியர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.  ஆறுபடை வீடுகளில் ஒன்றான 5-ம் படை வீடாக

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:47 pm

ஜி. யோகானந்தம்

 திருத்தணி, ஏப். 22: திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்குச் செல்லும் நுழைவுவாயிலில் உள்ள சுங்க வரி வசூல் மையம் திறக்கப்படாததால் ஊழியர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

 ஆறுபடை வீடுகளில் ஒன்றான 5-ம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் மலைக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்படிகள் வழியாக நடந்து மலைக்கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர்.

 மலைக்கோயிலுக்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் செல்வதற்கு சுங்க வரி வசூல் செய்யப்படுகிறது. அதாவது இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10-ம், வேன் மற்றும் காருக்கு ரூ.25-ம், ஆட்டோவுக்கு ரூ.15-ம், பஸ் மற்றும் லாரிகளுக்கு ரூ.50-ம் வரி வசூலித்து மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதி டிக்கெட் வழங்கப்படுகிறது.

 இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலைக்கோயிலுக்குச் செல்லும் நுழைவு வாயிலில் இருந்த சுங்க வரி வசூல் நிலையத்தை சற்று விரிவுபடுத்தி திருத்தணி இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் மூலம் நவீன வசதிகளுடன் டிக்கெட் விற்பனை நிலையம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் திறப்பு விழா நடக்காததால் தற்போது ஊழியர்கள் டிக்கெட் விற்பனை நிலையம் அருகில் சாலையோரம் கடும் வெயிலில் உட்கார்ந்து வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்குகின்றனர். வரும் கோடை கத்திரி வெயில் தொடங்க உள்ள நிலையில் விற்பனை நிலையம் திறக்காததால் எப்படி நுழைவுச் சீட்டு வழங்க முடியும்? என ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.

 இது குறித்து முருகன் கோயில் இணை ஆணையர் உரிய நடவடிக்கை எடுத்து புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுங்க வரி வசூல் டிக்கெட் விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்து

 பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பார்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.