எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இடிந்து விழும் நிலையில் சத்துணவு சமையலறை

ஸ்ரீபெரும்புதூர், ஆக.5 காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழமையான சமயலறைக் கூடத்தை இடித்து விட்டு புதிதாகக் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வே

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:39 am

எல். ஐயப்பன்

ஸ்ரீபெரும்புதூர், ஆக.5 காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழமையான சமயலறைக் கூடத்தை இடித்து விட்டு புதிதாகக் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்றத்தூர் ஒன்றியம் சாலமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட நரியம்பாக்கம் கிராமத்தில் ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 33 மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இப்பள்ளி அருகில் பள்ளியின் சத்துணவு சமையலறைக் கூடம் செயல்பட்டு வருகிறது.

இந்த சமையலறைக் கூடம் கடந்த 96-97-ம் ஆண்டு ஜவகர் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. கட்டடம் கட்டி 15 வருடங்கள் ஆன நிலையில் பெரும்பாலான இடங்களில் விரிசல் விழுந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் தற்போது உள்ளது.

எனவே சிதிலமடைந்த சமையலறைக் கூடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நரியம்பாக்கம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இடிந்து விழும்

நிலையில் உள்ள சத்துணவு சமையலறைக் கூடம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.