எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

போக்குவரத்து போலீஸார் பற்றாக்குறை: கள்ளக்குறிச்சி நகரில் தொடரும் நெரிசல்!

கள்ளக்குறிச்சி, ஆக. 9: போக்குவரத்து போலீஸôரின் பற்றாக்குறையால் கள்ளக்குறிச்சி நகரின் பல்வேறு பகுதிகளில் வாகன நெரிசலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:43 am

எஸ். முரளி

கள்ளக்குறிச்சி, ஆக. 9: போக்குவரத்து போலீஸôரின் பற்றாக்குறையால் கள்ளக்குறிச்சி நகரின் பல்வேறு பகுதிகளில் வாகன நெரிசலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பிரச்னைக்கு உரிய தீர்வுக் காண்பார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 கள்ளக்குறிச்சி நகர், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். குறிப்பாக கச்சிராயப்பாளையம் சாலையில் சீரானப் போக்குவரத்து என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

 ஏனெனில், இச்சாலையில் வாகனங்கள் செல்வதற்கும், வருவதற்கும் ஒரே வழிதான் உள்ளது. இந்நகரில் ஏதேனும் இடங்களில் விபத்து, தீவிபத்து போன்ற அசாம்பாவிதங்கள் ஏற்பட்டால் இந்தச் சாலை வழியாக தான் ஆம்புலன்ல், தீயணைப்பு வாகனங்கள் செல்ல வேண்டும்.

 ஆனால், கட்டுக்கடங்காத வாகன நெரிசலால் இவற்றால் உரிய நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்வழியே செல்லும் நோயாளிகள், மாணவர்கள், அலுவலக வேலைக்குச் செல்பவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடும் அவதியுறும் சூழ்நிலைய உருவாகியுள்ளது.

 மேலும் இப்பகுதியில் கோட்டாட்சியர் அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், மருத்துவமனைகள், கல்லூரிகள் அமைந்திருப்பதால் நாள்தோறும் ஏராளமானோர் இச்சாலை வழியாகதான் செல்ல வேண்டியுள்ளது. இதனால், இப்பகுதியில் வாகன நெரிசலால் பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பது தொடர்கதையாகி வருகிறது.

 மேலும் மிகவும் குறுகலான இப்பகுயில் கனரக வாகனங்கள், பேருந்துகளும் அனுமதிக்கப்படுவதாலும் கூடுதல் போக்குவரத்து நெரிசல் உருவாகிறது.

 போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள்: மேலும் இச்சாலைகளில் இருபுறமும் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் இயங்கி வருவதால், சாலைகளின் ஓரமாகவும் செல்ல முடியாமல் பாதசாரிகள் தவித்து வருகின்றனர்.

 மேலும் காய்கறி மார்க்கெட்டு செல்லும் காய்கறி லோடு லாரிகள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி பல மணிநேரம் மூட்டைகள் ஏற்றியும், இறக்கியும் போக்குவரத்துக்கு மேலும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

 போக்குவரத்து போலீஸôர் பற்றாக்குறை: இத்தனை பரபரப்பான இப்பகுதியில் வாகனங்களை ஒழுங்குப்படுத்த போக்குவரத்து போலீஸôர் இல்லை.

 கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல் நிலையத்தில், 1 காவல் ஆய்வாளர், 2 காவல் உதவி ஆய்வாளர்கள், 2 சிறப்பு காவல் உதவிஆய்வாளர்கள், 4 போலீஸôர் மட்டுமே உள்ளனர். இவர்கள் பஸ் நிலைய நுழைவு வாயில், சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள நான்குமுனை சந்திப்பில் மட்டுமே போக்குவரத்தைக் கண்காணிக்கின்றனர். மீதி இடங்களில் போக்குவரத்தை சீர் செய்ய போலீஸôர் இல்லை.

 எனவே, இப்பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள்ளக்குறிச்சி நகரில் போதுமான அளவில் போக்குவரத்து போலீஸôரை நியமிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.