கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

சிவத் தொண்டில் ஆஸ்திரேலிய ஓவியர்!

திருவண்ணாமலை, ஜூலை 14: திருவண்ணாமலை, அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சிவபெருமானுக்கு தொண்டு செய்து வருகிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஓவியர். ஆஸ்த

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:24 pm

சா. சரவணப்பெருமாள்

திருவண்ணாமலை, ஜூலை 14: திருவண்ணாமலை, அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சிவபெருமானுக்கு தொண்டு செய்து வருகிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஓவியர்.

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் சன்யாடா (54). சிவபெருமானின் தீவிர பக்தரான இவர், அவ்வப்போது திருவண்ணாமலைக்கு வந்து செல்வது வழக்கமாம். அண்மையில் திருவண்ணாமலை வந்தபோது அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகளில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார். அடி அண்ணாமலை மற்றும் அதற்கு பக்கத்தில் உள்ள மாணிக்கவாசகர் கோயில்களில் ஓவியம் தீட்டும் பணியில் இப்போது ஈடுபட்டு வருகிறார். அடி அண்ணாமலை பகுதியிலேயே தங்கியுள்ள இவர், கிராம மக்கள் கொடுக்கும் உணவையே உண்டு பசியை போக்கிக்கொள்கிறார்.

இதுகுறித்து, சன்யாடா கூறியது: நான் சிவபெருமானின் தீவிர பக்தன். அண்மையில் திருவண்ணாமலை வந்தபோது, இக் கோயிலின் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெறுவதை அறிந்தேன். சிவபெருமானுக்கு என்னால் முடிந்த தொண்டாக இக்கோயிலில் ஓவியம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளேன். எங்கள் ஊரில் ஓவியம் தீட்டி பல ஆயிரங்களை சம்பாதிப்பதைக் காட்டிலும், இங்கு ஓவியம் தீட்டுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 3 மாதங்களாக திருவண்ணாமலையில் தங்கி இருக்கிறேன். கும்பாபிஷேகப் பணிகள் முடிந்தவுடன் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டுள்ளேன் என்றார். இடது கை பழக்கம் கொண்ட சன்யாடா, மாணிக்கவாசகர் கோயிலில் தீட்டி வரும் ஓவியங்கள் கிராம மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.