பொது அதிகார ஆவணம் ("பவர் ஆப் அட்டார்னி'), விற்பனை உடன்படிக்கை ("சேல் அக்ரிமெண்ட்') மற்றும் உரிமை ஆவண ஒப்படைப்பு உடன்படிக்கை ("டெபாசிட் ஆப் டைட்டில் டீட் தொடர்பான அக்ரிமெண்ட்') ஆகியவற்றை பதிவு செய்வது சனிக்கிழமை (டிசம்பர் 1) முதல் கட்டாயமாக்கப்படுகிறது.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்தி: பொது அதிகார ஆவணம், விற்பனை உடன்படிக்கை மற்றும் உரிமை ஆவண ஒப்படைப்பு உடன்படிக்கை ஆகியவற்றை தேவைப்பட்டால் பதிவு செய்து கொள்ளலாம் என சட்டம் உள்ளது. இத்தகைய ஆவணங்களை பெரும்பாலானோர் பதிவு செய்யாததால் நில அபகரிப்பு மற்றும் போலியான ஆவணப் பதிவு நடைபெறுகிறது.
இதைத் தடுக்கும் பொருட்டு பதிவுச் சட்டம் 1908-ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, தமிழ்நாடு சட்டம் 29/2012 இயற்றப்பட்டுள்ளது. சட்டத் திருத்தத்தின்படி பொது அதிகார ஆவணம், விற்பனை உடன்படிக்கை, உரிமை ஆவண ஒப்படைப்பு உடன்படிக்கை மற்றும் கட்டுமான உடன்படிக்கை ஆகியவை கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.
பொது அதிகார ஆவணத்தினைப் பதிவு செய்யும் போது அதிகாரம் பெற்றவராக நியமிக்கப்படும் முகவர் மற்றும் சாட்சிகள் ஆகியோரின் புகைப்படங்களை ஆவணத்தில் ஒட்டுவது கட்டாயமாக்கப்பட்டுவதுடன், முகவரும் ஆவணத்தில் கையொப்பமிட வேண்டும். இந்த நடைமுறை சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாமில் வாக்குப் பதிவு தொடங்கியது
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

