திடீரென சரிந்து விழும் ஓடுகள் அச்சத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள்
நேருநகர் தொடக்கப் பள்ளி கட்டடத்தின் மேற்கூரையின் ஓடுகள் திடீர் திடீரென அடிக்கடி சரிந்து விழுவதால், தினமும் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி கற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.


நேருநகர் தொடக்கப் பள்ளி கட்டடத்தின் மேற்கூரையின் ஓடுகள் திடீர் திடீரென அடிக்கடி சரிந்து விழுவதால், தினமும் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி கற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
திருத்தணி நகராட்சிக்குட்பட்ட 19-வது வார்டில் உள்ளது நேருநகர். இப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 96 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு உதவித் தலைமை ஆசிரியர் என 3 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தொடக்கப் பள்ளி கட்டடத்தின் மேற்கூரை, சீமை ஓடுகளால் போடப்பட்டுள்ளது. தற்போது கட்டடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் கட்டடம் பழுதடைந்துள்ளது.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருத்தணி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 1 லட்சத்தில் 17 ஆயிரம் செலவில் ஆயிரம் மதிப்பில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
தற்போது மேற்கூரையின் ஓடுகள் ஆங்காங்கே உடைந்து உள்ளன. மழை பெய்தால், மழைநீர் மேற்கூரையில் இருந்து ஒழுகி வகுப்பறை முழுவதும் குளம் போல் தேங்கி விடுகிறது.
இது போன்ற நேரங்களில், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
பள்ளியில் பாடம் நடத்தும்போது ஓடுகள் உடைந்து வகுப்பறைக்குள் விழுவதால் மாணவர்களும், ஆசிரியர்களும் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், பள்ளியின் மேற்கூரை அதிகமான இடங்களில் பழுதடைந்து உள்ளதால், எந்த நேரத்திலும் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழும் அபாய நிலை உள்ளது.
அதேபோல் அதே பள்ளியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடிக் கட்டடமும் பழுதடைந்து காணப்படுகிறது. இதில் 3 வயது முதல் 5 வயதுக்குட்பட்ட 19 குழந்தைகள் இந்த அங்கன்வாடி மையத்தில் உள்ளனர்.
இந்த கட்டடத்தின் சுவர்கள் விரசலடைந்தும், சுவரின் கான்கிரீட்டுகள் உடைந்து அடிக்கடி குழந்தைகள் மேல் விழுவதாக அப்பகுதிகள் மக்கள் கூறுகின்றனர்.
எனவே குழந்தைகள், மாணவர்களின் நலன் கருதி நேரு நகர் தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையத்தை சீரமைக்க சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...