தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மந்த நிலையில் ஒரகடம் மேம்பாலப் பணி

ஸ்ரீபெரும்புதூர், செப். 2: ஒரகடம் பகுதியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மேற்கொளளப்படும் மேம்பாலக் கட்டுமான பணி மந்தமாக நடைபெற்று வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:12 am

எல். ஐயப்பன்

ஸ்ரீபெரும்புதூர், செப். 2: ஒரகடம் பகுதியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மேற்கொளளப்படும் மேம்பாலக் கட்டுமான பணி மந்தமாக நடைபெற்று வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டு பன்னாட்டுத் தொழிற்சாலைகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும் பல தொழிற்சாலைகளில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் பகுதியில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனைக் குறைப்பதற்காக சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையும்,சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ரூ.300 கோடி மதிப்பீட்டில் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையை இரு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாகவும், அதேபோல் சிங்கபெருமாள் கோயில்- ஸ்ரீபெரும்புதூர் சாலையை ஒரு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாகவும் அகலப்படுத்தி மேம்படுத்த திட்டமிட்டு சாலை அமைக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் சிங்கபெருமாள் கோயில்- ஸ்ரீபெரும்புதூர் சாலையும், வண்டலூர்- வாலாஜாபாத் சாலையும் சந்திக்கும் ஒரகடம் கூட்டுச் சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க ரூ20.89 கோடி மதிப்பீட்டில் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் 620 மீட்டர் நீளமுள்ள மேம்பாலம் அமைக்க கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி மேம்பாலத்தை 18 மாதங்களில் கட்டி முடிக்கத் தீர்மானிக்கப்பட்டு கிழக்குக் கடற்கரைச் சாலை கட்டுமான பணி நிறுவனத்திடம் மேம்பாலம் கட்டும் பணி ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் மேம்பாலம் 18 மாதங்களில் அதாவது 2010-ம் ஆண்டு இறுதியில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்க்கு வரும் என நெடுஞ்சாலைத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை மேம்பாலம் கட்டுபாணி பணி முடிவடையாமல் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஒரகடம் பகுதியில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சிங்கபெருமாள்கோயில்- ஸ்ரீபெரும்புதூர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் மேம்பாலத்துக்குக் கீழே உள்ள சாலைகளில் பெரும் பள்ளங்கள் உள்ளன. அதிக அளவில் பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் அதில் சிக்கிக் கொள்வதாலும், பள்ளங்களால் வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்து வருவதாலும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது.

எனவே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்துகளைத் தடுக்கவும் ஒரகடம் போலீஸôர் சாலையில் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

மேலும், வண்டலூர் பகுதியில் இருந்து வாலாஜாபாத் செல்லும் வாகனங்கள் ஒரகடம் வந்தவுடன் சிங்கபெருமாள் கோயில் சாலையில் சுமார் 2 கி.மீ. சென்று திரும்பி வரவும், அதே போல் வாலாஜாபாத் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. சென்று திரும்பி வரும் வகையில் போக்குவரத்தை மாற்றி அமைத்துள்ளனர். இதனால் அவசரமாக வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்குக் கூடுதல் நேரம் செலவாகிறது. மேலும் வாகனங்கள் சென்று திரும்பும் இடங்களில் வேகத்தடையோ அல்லது தடுப்புகளோ போலீஸôர் அமைக்காததால் வாகனங்கள் திரும்பும் போது எதிரே வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இவற்றைத் தவிர்க்க ஏதுவாக, பாலத்தை விரைந்து கட்டி முடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.