மண்ணாகிப்போன தார்ச் சாலை?
திருக்கோவிலூர், செப். 18: திருக்கோவிலூர் அருகே மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படும் பிரதான சாலை சீரமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ளது. திருக்கோவிலூரை அடுத்த சீர்ப்பனந்தல் கிராம


திருக்கோவிலூர், செப். 18: திருக்கோவிலூர் அருகே மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படும் பிரதான சாலை சீரமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ளது.
திருக்கோவிலூரை அடுத்த சீர்ப்பனந்தல் கிராமத்தில் இருந்து எடுத்தனூர் செல்லும் வகையில் ஏரிக்கரையில் தார்ச் சாலை (படம்) அமைக்கப்பட்டது. இவ்வழியே நாள்தோறும் பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர்.
மேலும் பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் இந்தச் சாலைதான் பயன்பட்டு வருகிறது.
சீர்ப்பனந்தல், பெரிய மணியந்தல், திருவரங்கம், கள்ளிப்பாடி, சிறுபனையூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலும் இச்சாலையைதான் பயன்படுத்துகின்றனர். ஆனால், இச்சாலை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இங்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்த சாலையை பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஆகியோர் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து தே.மு.தி.க. ரிஷிவந்திய ஒன்றியச் செயலர் டி.கே.கோவிந்தன் கூறியது:
இச்சாலையை சீரமைக்க இத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகாந்த், கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஆனால், இதுவரை யாரும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் தொகுதி என்பதால் இதுபோன்று பல பணிகள் புறக்கணிக்கப்படுகிறது என்றார் அவர்.
எனவே பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பழுதடைந்த நிலையில் காணப்படும் இச்சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...