வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தேவகோட்டை அருகே பாலியல் புகார்: ஆசிரியர் பணி இடைநீக்கம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள அனுமந்தக்குடி பள்ளி ஆசிரியர் பாலியல் புகார் காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On :2 மார்ச் 2013, 4:14 am IST

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள அனுமந்தக்குடி பள்ளி ஆசிரியர் பாலியல் புகார் காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அனுமந்தக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வேளாண் சிறப்பு ஆசிரியராக இருப்பவர் சீனிராஜன். இவர் மீதும், அப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் வேதமாணிக்கம் மீதும் மாணவிகளை கடந்த ஆண்டு சுற்றுலா அழைத்துச்சென்ற போது பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை செய்த மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள், ஆசிரியர்கள் இருவர் மீதும் தேவகோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். மேலும் இருவர் மீதும் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தனர்.

ஆசிரியர் வேதமாணிக்கம் மீது புகார் எழுந்த அன்றே அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் ஆசிரியர் சீனிராஜன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஆசிரியர் சீனிராஜன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பள்ளியை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர்.

இதுகுறித்த அறிக்கை உளவுத்துறை போலீஸôர் மூலம் மேலிடத்திற்குச் சென்றதாம். இதன்பிறகு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் அளித்த உத்தரவின்பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) ஜெயலெட்சுமி, ஆசிரியர் சீனிராஜனை பணி இடைநிக்கம் செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.