ஆஸ்கர் விருது பெற்ற "லைஃப் ஆப் பை' திரைப்படக்குழுவில் புகைப்படம் எடுக்கும் பணியை மேற்கொண்ட ஐ.செந்தில்குமார், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
÷ஹாலிவுட் திரைப்படமான "லைஃப் ஆப் பை' திரைப்படம் ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது.
÷ஆஸ்கர் விருதை பெற்றுள்ள படத்தின் இயங்குநர் ஆங்லிக்கும், இத் திரைப்படத்தில் பணியாற்றிய கலை இயக்குநர் டேவிட் கிராப்மேன், இந்தியக்குழு கலை இயக்குநர் ஜேம்ஸ் ட்ரூஸ்டெல் மற்றும் இத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
÷இத்திரைப்படம் பெத்தி செமினார் பள்ளி, கலவை கல்லூரி பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதுச்சேரியில் படமாக்கப்பட்டது.
÷இப்படக்குழுவினருடன் நானும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. இத்திரைப்படத்தில் கலை இயக்குநர்கள் புதுச்சேரியில் செட் அமைப்பதற்காக புகைப்படம் எடுக்கும் பணியை நான் செய்துள்ளேன்.
÷புதுச்சேரியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்படக்குழுவினருடன் இணைந்து பல்வேறு பணிகளை செய்துள்ளனர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










