வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கிருஷ்ணகிரி அருகே போலி ஆயில் ஆலை கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே போலி ஆயில் தயாரிப்பு தொழிற்சாலை நடத்திய 7 பேரை போலீஸார்

News image
Updated On :2 மார்ச் 2013, 4:50 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே போலி ஆயில் தயாரிப்பு தொழிற்சாலை நடத்திய 7 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பர்னஸ் ஆயிலை லாரிகளில் கொண்டு செல்லும் போது, வழியிலேயே ஓட்டுநர்களின் உதவியுடன் ஆயில் பேரல்களை திருடும் கும்பல், அந்த ஆயிலுடன் சில வேதிப் பொருள்களை சேர்த்து போலி ஆயில் தயாரிப்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இந்தக் கும்பலைப் பிடிக்க  போலீஸார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், பர்கூர் அருகே போலி ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருவது தெரிய வந்தது.

இதையடுத்து, வியாழக்கிழமை நள்ளிரவு எஸ்.பி. செந்தில்குமார் மற்றும் தனிப்படை போலீஸார் தொழிற்சாலை இயங்கும் குண்டியல்நத்தம் கிராமத்துக்குச் சென்றனர். அங்கு அந்த பகுதியைச் சேர்ந்த அன்பு (35), சன்மூர்த்தி (63) ஆகியோருக்குச் சொந்தமான மாந்தோப்பில் பெரிய தொட்டிகள் கட்டி தொழிற்சாலை அமைத்து போலி ஆயில் தயாரிப்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் அந்தக் கும்பலை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

இதில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள பிரகாசபுரத்தைச் சேர்ந்த ஸ்டாலின் (24), சுரேஷ் (27), பாண்டு (24), தேவசகாயம் (36), சுரேஷ் (19) மற்றும் அன்பு (35), சன்மூர்த்தி (63)ஆகிய 7 பேரைக் கைது செய்தனர்.

மேலும், அங்கிருந்த 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 96 ஆயில் பேரல்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு ரூ.13 லட்சம் இருக்கும். இதேபோல, சூளகிரியை அடுத்துள்ள மேலுமலை கிராமத்தில், அத்திமுகத்தைச் சேர்ந்த பாபா என்பவர் பதுக்கிவைத்திருந்த 105 லிட்டர் பர்னஸ் ஆயிலைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து சூளகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.