தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

திருவள்ளுவர் சிலை பராமரிப்புப் பணி: சாரம் அமைக்கும் பணி தீவிரம்

கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையில் பராமரிப்புப் பணிக்காக இரும்புக் கம்பிகளால் சாரம்

Updated On :11 மார்ச் 2013, 7:12 pm

கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையில் பராமரிப்புப் பணிக்காக இரும்புக் கம்பிகளால் சாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி கடலின் நடுவே பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை உப்புக்காற்றால் சேதமடையாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலிசிலிக்கான் என்னும் ரசாயன கலவை பூசப்படும். கடைசியாகக் கலவை பூசப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது சிலையில் கலவை பூசும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக முதல்கட்டமாக இரும்புக் கம்பிகளால் சாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திங்கள்கிழமை பீடம் பகுதியில் சாரம் அமைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து 3 மாதங்கள் வரை பணிகள் நடைபெறும் என்பதால் சிலைக்கு படகுப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.