வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மதுரையில் 16-ல் ராணுவ வேலைக்கு பயிற்சி முகாம்

மதுரையில் மே மாதம் நடைபெறவுள்ள ராணுவத்துக்கான ஆள்எடுப்பு முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ள  இளைஞர்களுக்கான

Updated On :12 மார்ச் 2013, 12:41 am IST

மதுரையில் மே மாதம் நடைபெறவுள்ள ராணுவத்துக்கான ஆள்எடுப்பு முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ள  இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் மார்ச் 16 ஆம் தேதி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இம்முகாமில் மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.

ராணுவத்தில் தொழில்நுட்ப சிப்பாய்கள், நர்சிங் உதவியாளர் சிப்பாய்கள், பொதுப்பணிக்கான சிப்பாய்கள், பண்டகசாலை கிளார்க் சிப்பாய்கள் போன்ற பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தொழில்நுட்ப சிப்பாய்கள் பணியிடத்துக்கு பதினேழரை வயது முதல் 23 வயது வரை இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.