உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மத்திய பள்ளிக் கல்வி ஆணைய மசோதாவுக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் மத்திய பள்ளிக் கல்வி ஆணைய மசோதா இருப்பதாக மார்க்சிஸ்ட்

Updated On :11 மார்ச் 2013, 7:04 pm

மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் மத்திய பள்ளிக் கல்வி ஆணைய மசோதா இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள மத்திய பள்ளிக் கல்வி ஆணைய மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக அமைந்துள்ளது.

கல்வியை வியாபாரப் பொருளாக மட்டும் பாவிக்கும் முறையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப்பட்ட பகுதியினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை உறுதி செய்யும் அதிகாரம் உள்ளிட்ட கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் முக்கிய அம்சங்களை அமலாக்குவது குறித்து இந்த மசோதாவில் எதுவும் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், எவ்வித மாற்றமும் இல்லாமல் இந்த மசோதா மாநிலங்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

கல்வி என்பது மாநில, மத்திய அரசுகளின் அதிகார வரம்புக்குட்பட்ட பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே, கல்வி தொடர்பான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முன்பு மாநில அரசுகளின் எதிர்ப்புகளையும் கணக்கில் கொண்டு மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.