நகர்ப்புறங்களில் வறுமை ஒழிப்புக்கு ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள்: நகர்ப்புற வறுமை குறைப்புக்கான ஸ்வர்ண ஜெயந்தி "ஷகரி ரோஜ்கார் யோஜனா' திட்டத்துக்கு 2013-14-ம் ஆண்டில் மொத்தம் ரூ. 99.73 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற வறுமை நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த 2012-13-ம் ஆண்டில் தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ரூ. 200 கோடியில் தொடங்கப்பட்டது. நகர்ப்புற வறுமைக் குறைப்பை இலக்காகக் கொண்டுள்ள அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து, அதில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை நிறைவு செய்ய தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பெறப்படும் நிதி பயன்படுத்தப்படுகிறது. 2013-14-ம் ஆண்டிலும் இந்த திட்டத்துக்காக ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 110 வட்டாரங்களில் கிராமப்புற வாழ்வாதார இயக்கம்: 2012-13-ம் ஆண்டு புதுவாழ்வுத் திட்டத்தின் உத்திகளைப் பின்பற்றி, கிராமப்புற வறுமையை ஒழிக்க 60 வட்டாரங்களில் தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் ஆண்டுகளில் இந்தத் திட்டம் படிப்படியாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும். இதன்படி 2013-14-ம் ஆண்டில் மேலும் 110 வட்டாரங்கள் இந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.
2013-14-ம் ஆண்டில் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் புதுவாழ்வுத் திட்டத்துக்கு ரூ. 350 கோடியும், தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்துக்காக மாநில அரசின் பங்காக ரூ. 100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

