இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

நில வழிகாட்டி மதிப்பு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள நில வழிகாட்டி மதிப்பு அடுத்த ஆண்டுக்கு

Updated On :22 மார்ச் 2013, 4:58 am IST

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள நில வழிகாட்டி மதிப்பு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையின் இணைப்புப் பகுதியில் எதிர்காலக் கணிப்புகள் என்ற தலைப்பின் கீழ் இந்த விவரம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலவழிகாட்டி மதிப்புகள் மிகக் குறைவாக இருந்தன. அதாவது வெளிச்சந்தை மதிப்பைக் காட்டிலும் அரசின் நில வழிகாட்டி மதிப்பீடுகள் மிகக் குறைவாக இருந்தன. இதையடுத்து, வழிகாட்டி மதிப்பை திருத்தி அமைக்க பதிவுத் துறை முடிவு செய்தது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வழிகாட்டி மதிப்பு மாற்றி அமைக்கப்பட்டன. புதிய வழிகாட்டி மதிப்புகள் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் இது குறித்து நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  வழிகாட்டி மதிப்பீட்டு உயர்வை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளது. எனினும் வரும் நிதியாண்டில் முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவு மூலமாகக் கிடைக்கும் வரவுகள் 15.93 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி நடப்பு நிதியாண்டில் பெறப்பட்ட ரூ.8,516 கோடி வருவாய் வரும் நிதியாண்டில் ரூ.9,874 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.