பள்ளிக் கல்வித் துறை மூலம் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களுக்கு வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து சட்டப் பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:
2013-2014-ல் 97.70 லட்சம் மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் வழங்க ரூ.217.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் 86.71 லட்சம் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்க ரூ.110.96 கோடி, 14.02 லட்சம் மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்க ரூ.323.70 கோடி, 53.53 லட்சம் மாணவர்களுக்கு நான்கு சீருடைத் தொகுப்புகள் வழங்குவதற்காக ரூ.353.22 கோடி, 13 லட்சம் மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்க ரூ.19.79 கோடி, 6.1 லட்சம் மாணவர்களுக்கு காலணிகள் வழங்க ரூ.8.47 கோடி, 9.67 லட்சம் மாணவர்களுக்கு வடிவியல் பெட்டிகள், வரைபடப் புத்தகங்கள் போன்றவை வழங்க ரூ. 6.65 கோடி, 6.03 லட்சம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ.200.98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கம்பளி ஆடைகள்: மலைப் பகுதிகளில் 10.30 லட்சம் மாணவர்களுக்கு கம்பளி ஆடை வழங்க ரூ.4.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாணவியர்களுக்கு 32.79 லட்சம் சானிடரி நாப்கின்கள் வழங்க ரூ.54.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் மூலமாக மாநில அரசுக்கு மொத்தமாக ரூ.1,299.74 கோடி செலவு ஏற்படும் என நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆணவக்கொலைகளை தடுக்க உடனடியாக சட்டம் இயற்றுக: திருமாவளவன் எம்.பி

இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!
நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள்கள் விற்ற நபர்கள் கைது!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



