இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

ஆணவக்கொலைகளை தடுக்க உடனடியாக சட்டம் இயற்றுக: திருமாவளவன் எம்.பி

ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கு உடனடியாக சட்டத்தை இயற்ற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியிருப்பது தொடர்பாக...

News image

திருமாவளவன் - கோப்புப்படம்

Updated On :14 ஜூன் 2026, 7:18 pm IST

சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெற்று ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கு உடனடியாக சட்டத்தை இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தொடா்ந்து ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. இத்தகைய சாதி ஆணவப்படுகொலைகளைத் தடுப்பதற்கு ஏதுவாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது விசிகவின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்றிட வேண்டும் என மத்திய , மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அந்த வழிகாட்டுதலை மத்திய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பது கவலையளிக்கிறது.

தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான ஆய்வுகளை செய்ய கடந்த ஆண்டு நவம்பா் மாதம் அப்போதைய திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. அதன் அறிக்கை இன்னும் அரசிட ஒப்படைக்கப்படவில்லை.

இந்த நிலையில், தற்போதைய தவெக அரசு கேஎன் பாஷா ஆணையத்தின்’ பரிந்துரைகளைப் பெற்று ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அவா்.

Summary

Regarding Thirumavalavan's insistence on the immediate enactment of a law to prevent honor killings...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.